பெங்களூர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து திண்டுக்கல்லில் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு
திண்டுக்கல்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் பங்கேற்பதற்காக தென்னிந்திய மாநிலங்களுக்கு வருகை தருகிறார். இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடி.

2-வது முனையத்தின் சிறப்பு
அமெரிக்க ஜி.பி.சி (பசுமை கட்டிடக் குழு) தனது செயல்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக, சான்றளிக்கப்பட்ட பிளாட்டினம் மதிப்பீடாக இந்த முனையம் இருக்கும். 2-வது முனையத்திற்கான அனைத்து கலை வேலைபாடுகளையும் "நௌரசா" என்ற கருப்பொருள் ஒன்றிணைக்கிறது. கர்நாடகாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் இந்த வேலைபாடுகள் இந்தியர்களின் நெறிகளையும் பிரதிபலிக்கிறது. 4 வழிகாட்டு நெறிமுறைகளுடன் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தோட்டம், நீடித்த, தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரத்தின் முனையம் என்பவை அவை. இந்த அனைத்து அம்சங்களும் 2-வது முனையத்தை இயற்கையில் ஆழமாக பதியச் செய்து அனைத்து பயணிகளுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றன.

வந்தே பாரத் ரயில்
பெங்களூரு, க்ரந்திவீரா சங்கோலி ராயன்னா (கேஎஸ்ஆர்) ரயில் நிலையத்தில் சென்னை - மைசூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்துத் தொடக்கிவைக்க உள்ளார். இது நாட்டின் 5-வது மற்றும் தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். பிரபல சுற்றுலா நகரமான மைசூரு மற்றும் பெங்களூரு தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் சென்னையின் தொழில் கேந்திரத்தின் இடையே போக்குவரத்தை இது மேம்படுத்தும்.

காசி யாத்திரை ரயில்
பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திலிருந்து பாரத் கவ்ரவ் காசியாத்திரா ரயில் போக்குவரத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். கர்நாடகாவிலிருந்து காசிக்கு யாத்ரீகர்களை அனுப்ப ரயில்வேத் துறையின் கர்நாடக அரசும் இணைந்து பாரத் கவ்ரவ் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் முதலாவது ரயில் இதுவாகும். காசி, அயோத்தி மற்றும் பிரக்யாராஜூக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வசதியான தங்குமிடம் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும்.

கெம்பே கவுடா சிலை
பெங்களூருவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைக்க உள்ளார். பெங்களூரு நகர நிறுவனரும், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவருமான நடபிரபு கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவு கூரும் விதமாக இது கட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலையை வடிவமைத்த ராம் வி சதர் 98 டன் வெண்கலம் மற்றும் 120 டன் எஃகு ஆகியவற்றுடன் இதனை உருவாக்கியுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூர் நகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு?












Click it and Unblock the Notifications