Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம பெருசு.. தாமரை வடிவில் கர்நாடகாவில் புதிய விமான நிலையம்! திறந்து வைத்த மோடி - ஓசூருக்கு இல்லையே

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தாமரை வடிவிலான புதிய விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவுக்கு ஒரு நாள் பயணமாக வருகை தந்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தின் ஷிமோகாவில் தாமரை வடிவிலான புதிய விமான நிலையத்தை திறந்து வைத்து இருக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு செலவிடப்பட்ட நிதி, அதன் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

கர்நாடகாவில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஷிமோகா மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய விமான நிலைய திறப்பு விழா மற்றும் பெலகாவியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்கு சென்று உள்ளார்.

இந்த ஆண்டில் 5 வது முறையாக கர்நாடக மாநிலத்துக்கு சென்ற அவருக்கு அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் என பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாமரை வடிவ விமான நிலையம்

தாமரை வடிவ விமான நிலையம்

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஷிமோகா விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கவிஞர் குவேம்புவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விமான நிலையத்தை மேலிருந்து பார்க்கையில் தாமரைபோல் தெரியும் வகையில் வடிவகைக்கப்பட்டு இருக்கிறது.

 செலவும் சிறப்பும்

செலவும் சிறப்பும்

ரூ.450 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும் இந்த விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் ஒரு மணி நேரத்தில் 300 பயணிகளை கையாள முடியும். ஷிமோகா நகரத்தில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கான இணைப்பை இந்த விமான நிலையம் ஏற்படுத்தும் என்று அரசு தெரிவித்து உள்ளது.

 2 வது பெரிய விமான நிலையம்

2 வது பெரிய விமான நிலையம்

775 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருக்கும் இந்த விமான நிலையம் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தின் 2 பெரிய விமான நிலையமாக மாறி இருக்கிறது இந்திய ஷிமோகா விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் முதன் முதலில் பயணித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நேரில் ஆய்வு

நேரில் ஆய்வு

விமான நிலையத்துக்கு சென்று அதன் கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி அதன் மாதிரியையும் பார்வையிட்டார். உதான் திட்டத்தின் கீழ் ஷிமோகா விமான நிலையம் கட்டப்பட்டதை போன்றே தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரிலும் விமான நிலையத்தை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 ஓசூர் விமான நிலைய கனவு

ஓசூர் விமான நிலைய கனவு

ஆனால், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் 150 கிமீ சுற்றளவுக்குள் ஓசூர் வருவதால் அங்கு உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டதாக அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அறிவித்தார்.

ஷிமோகா நகரம்

ஷிமோகா நகரம்


பெங்களூரு நகரத்துக்கு அருகே ஓசூர் அமைந்து உள்ளதால் அங்கும் தொழில் வளர்ச்சி அதிவேகத்தில் பெருகி வரும் சூழலில் அங்கு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் தற்போது பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையம் அமைந்துள்ள ஷிமோகா, மாவட்ட தலைநகரம் தானே தவிர ஓசூர் போன்ற பெரிய தொழில் நகரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+