முனகல் சப்தம்.. கக்கூஸில் ரகசிய அறையில் விபச்சாரம்.. கர்நாடகாவில் போலீஸ் அடுத்தடுத்து அதிரடி!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் கழிவறையில் ரகசிய அறை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாக டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் செக்ஸ் ராக்கெட் என்பது ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் ஒரு இடத்தில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

கடை போல் இருந்த இடம்
அங்கு வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு சாதாரண கடை போல் இருந்தது. உள்ளே சென்று பார்த்தனர். அங்கு யாருமே இல்லை. ஒரு வேளை கழிவறையில் யாரேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதையடுத்து போலீஸார் கழிவறையை திறந்து பார்த்தனர். அங்கு யாருமே இல்லை. வழக்கம் போல் எஸ்கேப்பாகிவிட்டார்கள் இல்லாவிட்டால் ராங் இன்பர்மேஷனாக இருக்கும் என நினைத்து போலீஸார் லேசாக நகர தொடங்கினர். அப்போது எங்கோ ஒரு முனகல் சப்தம் வந்தது.

சுதாரித்த போலீஸ்
போலீஸார் உடனே சுதாரித்தனர். சுற்றி பார்த்தனர். யாருமே இல்லை. யாரும் இல்லாத இடத்தில் எப்படி இந்த முனகல் சப்தம் என எண்ணிய போலீஸார் கழிவறையில் ஏதோ இருக்கிறது என்பதை அறிந்து அங்கு சோதனையிட்டனர். அப்போதுதான் கழிவறை டைல்ஸுக்கு மத்தியில் ஒரு சிறிய கதவு இருந்ததை கண்டனர்.

விபச்சார அழகி
உடனே அந்த கதவை திறந்தால் உள்ளே விபச்சார அழகி, வாடிக்கையாளர், புரோக்கர் என மூவரும் இருந்தனர். முட்டி போட்டுக் கொண்டு செல்லும் அளவுக்கு மிகச் சிறிய அறையில் விபச்சார அழகியையும் வாடிக்கையாளரையும் கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்களை வெளியே வர சொல்லிய போலீஸ் அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் 3 பேர் கைது
இதையடுத்து போலீஸார் அந்த இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லேடீஸ் ஹாஸ்டல் என பெயர் வைத்துக் கொண்டு அந்த இடத்தில் விபச்சாரம் நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.












Click it and Unblock the Notifications