கன்னட மொழி இல்லை.. பெங்களூரில் பவன் கல்யாணின் திரைப்பட பேனரை கிழித்து எறிந்த கன்னட அமைப்பினர்
பெங்களூர்: ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹர வீர மல்லு படம் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று ஒருவழியாக ரிலீஸ் ஆனது. இதனால் இதனால், பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பெங்களூரில் திரையரங்கு ஒன்றில் வைகப்பட்ட பவன் கல்யாண் பட பேனரில் கன்னட மொழி இடம்பெறவில்லை என்று கூறி கன்னட அமைப்பினர் அதனை கிழித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹர வீர மல்லு படம் இன்று ரிலீஸ் ஆனது. பலமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்த படம் இன்று ஒருவழியாக ரிலீஸ் ஆனது. இதனால், பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் இந்த படம் இன்று வெளியானது.

கர்நாடகாவின் பெங்களூரில் இந்த படம் வெளியான திரையரங்கு ஒன்றில் புகுந்த கன்னட அமைப்பினர் படத்தின் போஸ்டரை கிழித்து எரிந்தனர். படத்தின் ப்ரோமோஷனலுக்காக வைக்கப்பட்ட பதாகையில் கன்னட மொழி இடம் பெறவில்லை என்று கூறி கன்னட அமைப்பினர் போஸ்டரை கிழித்து எறிந்தனர். கன்னட அமைப்பினர் போஸ்டரை கிழித்து எறியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன.
பவன் கல்யாண் ரசிகர்கள் பிரமாண்ட பேனர் வைத்து இருந்ததாகவும், அதில்தான் கன்னட மொழி இல்லை என்று கூறி கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததகாவும் சொல்லப்படுகிறது. கன்னட அமைப்பினர் கூறுகையில், "கர்நாடகாவில் திரையிடப்படும் படங்களின் போஸ்டர்களில் கன்னட மொழி கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும்.
பெங்களுரில் போஸ்டர் ஒட்ட விரும்பினால், அதில் கன்னட மொழியுடன் அச்சிடுங்கள்" என்று கூறினர். இதனால், சில இடங்களில் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே போராட்டமும் ஏற்பட்டது. எனினும் பெரிய அளவில் மோதல் ஏற்படவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications