Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்! மே 31ல் போலீஸில் ஆஜராகிறேன்.. வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31 ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராவதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணா தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டில் இருந்த போது யூடியூபில் என் மீதான குற்றச்சாட்டுகளை பார்த்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் என் அப்பா, அம்மா, தாத்தா ஆகியோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

Prajwal Revanna says he will appear before SIT on May 31

அது போல் நான் வெளிநாட்டில் எங்கு இருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதால் குமாரண்ணா, ஜேடிஎஸ் கட்சியினர், நிர்வாகிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏப்ரல் 26 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் என் மீது எந்த வழக்குகளும் இல்லை.

சிறப்பு புலனாய்வு குழுவும் ஏற்படுத்தப்படவில்லை. நான் வெளிநாட்டிற்கு சென்ற 2, 3, நாட்களுக்கு பிறகு யூடியூபில் எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நான் பார்த்தேன். நான் வரும் 31 ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகிறேன். 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எனது வழக்கறிஞர் மூலம் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளேன். என்னை தவறாக நினைக்காதீர்கள்.

மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு முன்பு நான் ஆஜராவேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். எனக்கு சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிப்பேன். காங்கிரஸ் கட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என் மீதான குற்றச்சாட்டுகள். இதனால் நான் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளேன். தற்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என பிரஜ்வல் ரேவண்ணா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்ததாக 3,000 ஆபாச வீடியோக்கள் பரவ தொடங்கின. கட்சியில் உள்ள பெண்கள், உதவிக் கோரி தன்னை அணுகும் பெண்கள், அரசு பெண் அதிகாரிகள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக எடுத்ததாகவும் அதை வைத்து மீண்டும் மீண்டும் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்நாடகா மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் முதல்வர் சித்தராமையா சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மே 18ஆம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் அவர் இருக்கும் இடம் கேட்டு இன்டர்போலுக்கு சிபிஐ மூலம் சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக் கொண்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

வரும் ஜூன் 4 ஆம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெறுவாரா இல்லை தோல்வி அடைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை வென்றால் அவர் ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருடைய வெற்றி எப்படி பார்க்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா, தற்போது ஜெர்மனியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+