Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் தூங்காமல் அழுத பிரஜ்வல் ரேவண்ணா.. தண்டனை பெற்ற முதல் நாளில் குமுறிய தேவகவுடா பேரன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 48 வயது பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை பெற்ற முதல் நாளில் கதறி அழுதுள்ளார். மேலும் மனஅழுத்தத்துடன் தூங்காமல் இருந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. கர்நாடகாவில் எம்எல்ஏவாக ரேவண்ணா உள்ளார். இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 34 வயது ஆகிறது. இவர் மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது.

prajwal-revanna-wept-spending-the-first-night-in-the-jail-after-sentenced-to-life-in-a-rape-case

பெண்களை மிரட்டி அவர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு பல வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையானது. இதுபற்றி விசாரணை நடத்திய சிறப்பு விசாரணை குழுவினர் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 48 வயது நிரம்பிய பணிப்பெண்ணை அவர் ஹாசன் பண்ணை வீடு மற்றும் பெங்களூரில் உள்ள வீட்டில் வைத்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் நேற்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையை வழங்கியது.

இந்த தீர்ப்பை கேட்டவுடன் நீதிமன்றத்திலேயே பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுதார். அதன்பிறகு அவர் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை பெற்ற முதல் நாள் இரவில் சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா எப்படி இருந்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதிக்கான உடை வழங்கப்பட்டுள்ளது. கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் ஆயுள் தண்டனை என்பதால் பிரஜ்வல் ரேவண்ணா மனஅழுத்தத்தில் தூங்காமல் சிறையில் இருந்துள்ளார்.

தாத்தா முன்னாள் பிரதமர், தந்தை முன்னாள் அமைச்சர், சித்தப்பா எச்டி குமாரசாமி கர்நாடகா முன்னாள் முதல்வர், தற்போதைய மத்திய அமைச்சர். இப்படி அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் செல்வ செழிப்புடன் கோடீஸ்வரராக வாழ்ந்த பிரஜ்வல் ரேவண்ணா இனி சிறை தான் தன் வீடு என்பதை நினைத்து கதறி அழுதுள்ளார். குறிப்பாக சிறை மருத்துவமனையில் அவருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் நலமாக இருந்தார். ஆனால் அவர் தனது தண்டனையை நினைத்து டாக்டர்கள் முன்பு அழுதுள்ளார். அதோடு தனது மனவேதனையை வெளிப்படுத்தி கண்ணீர் வடித்துள்ளார்.

அதோடு இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் எம்பி என்பதால் உயர் பாதுகாப்பு உள்ள சிறை பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கும் தூக்கமின்றி தவித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+