தர்ஷன் மட்டும் என்ன ஸ்பெஷலா.. எங்களுக்கும் பீடி, சிகரெட் கொடுங்க.. கைதிகள் உண்ணாவிரதம்
பெங்களூர்: பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் புகை பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, பெல்காவியில் உள்ள ஹிந்தல்கா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்கு புகையிலைப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளனர்.
தர்ஷனுக்கு பெங்களூரு சிறைச்சாலையில் வழங்கப்பட்ட அதே வசதிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரி 500க்கும் மேற்பட்ட கைதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், காலை உணவு போலவே, மதிய உணவை புறக்கணிப்போம் என்று அவர்கள் மிரட்டினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கைதிகள் தண்டனை பெற்றவர்கள் இல்லை, விசாரணை கைதிகள்தான். அவர்களுக்கு வெளியில் இருந்து அல்லது வருகை தரும் நபர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று ஹிண்டல்கா சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
"முன்பு கைதிகள் வெளியில் இருந்து தங்கள் பழக்கத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர்; ஆனால், சிறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், இந்த வசதி நிறுத்தப்பட்டது," என்று அவர் கூறினார்.
பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தர்ஷன் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வெடித்துள்ளது. சிறைச்சாலையின் வளாகத்தில் தர்ஷன் சில ரவுடி கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருந்த வீடியோ மற்றும் படங்கள் போன வாரம் வெளியானது.
நடிகர் தர்ஷன் மற்றும் அவரது 9 கூட்டாளிகள், நடிகை பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் அனுப்பிய ரசிகர் எஸ். ரேணுகாஸ்வாமியை கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர்.
தர்ஷன் புகை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு 9 சிறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தர்ஷன் பெல்லாரி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் சிறைச்சாலை அமைப்பில் சமத்துவமற்ற நடவடிக்கைகள் குறித்த பிரச்சினைகளை எடுத்துக்காட்டியது மற்றும் சர்ச்சையை உருவாக்கியது.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications