பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் ஸ்டைலை கையிலெடுத்த பிரியங்கா காந்தி.. மாஸ் அறிவிப்பால் குஷியில் கர்நாடக பெண்கள்.. ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் எதிர் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்புக் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 'மக்கள் குரல்' யாத்திரை என பிரசார பயணத்தை கடந்த 11ம் தேதி தொடங்கியது.

 செல்லாது செல்லாது.. 3 டோஸ் போட்டாலும் கொரோனா வருமாம்! தலைசுற்ற வைக்கும் தகவலை சொன்ன ஆய்வு முடிவு! செல்லாது செல்லாது.. 3 டோஸ் போட்டாலும் கொரோனா வருமாம்! தலைசுற்ற வைக்கும் தகவலை சொன்ன ஆய்வு முடிவு!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா இணைந்து ஒரே பேருந்தில் இந்த யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரை பெலகாவி மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. 1924ம் ஆண்டு மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக இங்குதான் பதவியேற்றார். அதன் நினைவாகதான் யாத்திரை இங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

யாத்திரை

யாத்திரை

11ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒரே பேருந்தில் சிவக்குமார் மற்றும் சித்தராமையா யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த யாத்திரை 22 மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறது. யாத்திரையில் பாஜக செய்யத் தவறியது மற்றும் செய்த தவறுகள் என பிரித்து மக்கள் மத்தியில் இவர்கள் பிரசாரம் மேற்கொள்வார்கள். 29ம் தேதிக்கு பின்னர் இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து பிரசாரம் மேற்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் தென் மாவட்டங்களிலும், சித்தராமையா வட மாவட்டங்களையும் மையப்படுத்தி பிரசாரங்களை மேற்கொள்வார்.

அறிவிப்பு

அறிவிப்பு

யாத்திரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது. இது பாஜக மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இலவசம் என்பதற்கு கடும் எதிர்ப்புகளை பாஜக தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸின் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "இந்த அறிவிப்பு காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மையையும், பகுத்தறிவற்ற தன்மையையும் காட்டுகிறது. தேர்தல் வெற்றிகாக மட்டுமே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப தலைவிகளுக்கு பணம்

குடும்ப தலைவிகளுக்கு பணம்

இதுபோன்ற அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஏனெனில் அவர் அரசியலுக்கு புதியவர். ஆனால் காங்கிரஸ் அறிவித்திருப்பது முற்றிலும் பொறுப்பற்றதனம். அவர்களால் 6 மணி நேரம் கூட மின்சாரத்தை முறையாக வழங்க முடியாது. அப்படி இருக்கையில் 200 யூனிட் மின்சாரத்தை எப்படி இலவசமாக வழங்குவார்கள்?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்திருக்கிறார். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதிரடி

அதிரடி

முன்னதாக நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்திருந்தனர். ஆனால் இலவசங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியிருந்தார். தற்போது இதேபோல கர்நாடக பாஜக இந்த இலவசங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதிசேஷத்திலும் காங்கிரஸ் இதே வாக்குறுதியை கொடுத்தது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 40 இடங்களை பெற்று வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மாறாக பாஜக 25 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்கிறார்கள். பிரியங்கா இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Assembly elections will be held in Karnataka next May. In this case, the Congress party has been making many drastic announcements. Priyanka Gandhi has already announced that 200 units of free electricity will be given to the heads of the families, Rs.2,000 per month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X