முனகல் சப்தம்! கழிவறைக்குள் ஒரு ரகசிய அறை.. உள்ளே விபச்சார அழகியும், கஸ்டமரும்.. காவலுக்கு புரோக்கர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் கழிவறையில் ஒரு ரகசிய அறை வைத்து அங்கு விபச்சாரம் செய்வதை போலீஸார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பணம், நகை, முக்கிய ஆவணங்களை பாதுகாக்க ரகசிய அறை வைத்ததை பார்த்துள்ளோம். அது போல் அந்த காலத்தில் அரசர்கள் ஒரு நாட்டிலிருந்து மறு நாட்டிற்கு போர் புரிந்து வரும் போதும் இது போன்ற ரகசிய சுரங்கங்களை பார்த்துள்ளோம்.
எதிரி நாட்டினருடன் ஒரு நாட்டின் 5 படைகளும் மோதியும் வெல்ல முடியாத பட்சத்தில் அரசர் அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி தப்பிவிடுவது வழக்கம்.

ரகசிய சுரங்கம்
அது போல் ரகசிய சுரங்க அறையில் ஆட்களை கடத்தி வைப்பது, கணக்கில் வராத பணம், நகைகளை வைத்திருப்பது என சினிமாக்களிலும் செய்திகள் மூலமாகவும் பார்த்துள்ளோம். ஆனால் கழிவறைக்குள் ஒரு ரகசிய அறை வைத்திருப்பதை யாரேனும் கேள்விப்பட்டதுண்டோ? வாங்க எதுக்காக என்று பார்ப்போம்!

கர்நாடகாவில் ராக்கெட் விபச்சாரம்
டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ராக்கெட் விபச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த போலீஸார் தனிப்படை அமைத்து விபச்சாரம் செய்யும் இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அப்படியே ஒரு இடத்தில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்து அங்கு போலீஸார் விரைந்தாலும் அங்கு விபச்சாரம் நடந்ததற்கான ஒரு அறிகுறியும் இருக்காது.

புரோக்கர்கள்
அது போல் புரோக்கர்கள் கச்சிதமாக போலீஸாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரத்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகா மாவட்டம் சித்ர துர்காவில் ஒரு இடத்தில் விபச்சாரம் நடத்துவதாக தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில் போலீஸார் ரெய்டுக்கு சென்றனர்.

அறைகளில் தேடிய போது தெரியவில்லை
அப்போது அந்த இடத்தில் இருந்த அறைகளில் தேடிய போது யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த இடத்தில் உள்ள பாத்ரூமை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு இடத்தில் இருந்து முனகல் சப்தம் கேட்டது. இதனால் போலீஸார் எங்கிருந்து சப்தம் வருகிறது என பார்த்த போது டைல்ஸ் பதிக்கப்பட்ட சுவரில் இருந்து வருவதை கண்டனர்.

டைல்ஸில் சிறிய பாதாள அறை
அப்போது சோதனை செய்ததில் அந்த டைல்ஸ் சுவற்றில் ஒரு சிறிய அறை போல் இருந்தது. இதையடுத்து போலீஸார் அந்த அறையை திறந்தனர். அதில் சிறிய பாதாள அறை போன்று இருந்தது. அங்கு விபச்சார அழகி, வாடிக்கையாளர், புரோக்கர் ஆகிய மூவர் இருந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர். வெளியே இருந்து பார்ப்பதற்கு சாதாரண இடம் போல் இருந்தாலும் ஒரு டாய்லெட்டுக்குள் இப்படி ஒரு ரகசிய அறையில் விபச்சாரம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications