பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறந்த நிர்வாகத்திற்கான PAI தரவரிசை.. கேரளா முதலிடம், தமிழ்நாடு நம்பர் 2.. கடைசி இடம் பிடித்த உ.பி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகம் கொண்ட மாநிலம் கேரளா என்று பொது விவகாரக் குறியீடு (Public Affairs Index) அறிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு இதில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மாநில அரசுகளின் ஆட்சி நிர்வாகம் மற்றும் நலத்திட்டங்களை கருத்தில்கொண்டு PAI தர குறியீடு வெளியிடப்படுவது வழக்கம். அதாவது பொது விவகாரக் குறியீடு (Public Affairs Index) என்ற தர மதிப்பீடு வெளியிடப்படும்.

ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் ஆட்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை அடிப்படையாக வைத்து அம்மாநில அரசுக்கு மதிப்பெண் வழங்கப்படும். வளர்ச்சி, சமத்துவம், நிலையான தன்மை ஆகிய மூன்று விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்படும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12265 பேருக்கு கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து அதிகரிப்பு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12265 பேருக்கு கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து அதிகரிப்பு

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரை சேர்ந்த Public Affairs Centre என்ற தனியார் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. மாநில அரசுகளை கவனமாக ஆராய்ந்து கடந்த 5 வருடமாக இந்த அறிக்கையை Public Affairs Centre வெளியிட்டு வருகிறது. இதில் முதல் வருடத்தில் இருந்து இப்போது வரை கேரளாதான் அதிக PAI புள்ளிகளை பெற்று முதலிடம் வகித்து வருகிறது.

முதலிடம்

முதலிடம்

இந்த முறையும் கேரளா மொத்தமாக 1.618 புள்ளிகளை பெற்று தரவரிசையில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக முதலிடம் பிடித்துள்ளது. கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு இந்த வருடமும் 0.897 புள்ளிகளோடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை இன்னொரு தென்னிந்திய மாநிலமான தெலுங்கானா 0.897 புள்ளிகளோடு பெற்றுள்ளது.

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

மற்ற இடங்களை பெற்ற மாநிலங்களில் விவரங்கள்

சட்டீஸ்கர் - 4வது இடம், 0.872 புள்ளிகள்

குஜராத் - 4வது இடம், 0.782 புள்ளிகள்

பஞ்சாப் - 4வது இடம், 0.643புள்ளிகள்

கர்நாடகா - 4வது இடம், 0.121 புள்ளிகள்

ஆந்திர பிரதேசம் - 4வது இடம், 0.077 புள்ளிகள்

முதல் 10 இடங்களுக்குள் 5 தென்னிந்திய மாநிலங்கள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சிறிய மாநிலங்களில் சிக்கிம் 0.907 புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம் இதில் கடைசி இடம் பிடித்துள்ளது. -1.418 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தை உத்தர பிரதேசம் பிடித்துள்ளது. இந்தியாவில் மோசமான ஆட்சி நிர்வாகம் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இந்த புள்ளிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமத்துவம், நிலையான தன்மை ஆகியவை மிக குறைவாக உள்ளதால் உத்தர பிரதேசம் இதில் பின்னடைவை சந்தித்துள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் தரவரிசை பட்டியலில் உத்தர பிரதேசம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் கடைசிக்கு முந்தைய இடத்தை பெற்ற உத்தர பிரதேசம் இந்த முறை கடைசி இடத்தை பெற்றுள்ளது.

English summary
Public Affairs Index; Kerala tops the list, Tamilnadu comes 2nd, Uttar Pradesh takes last place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X