Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை.. குடும்பத்தினர் கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனது அண்ணன் சிவராஜ் குமார் நடிக்கும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற புனித் ராஜ்குமாரின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது.

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். 46 வயதாகும் இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை விடாதவர். அது போல் நேற்றைய தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சரிந்து விழுந்தார். உடனே அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சுயநினைவின்றி வந்த அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது.

ரசிகர்கள் கதறல்

ரசிகர்கள் கதறல்

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்து ஏராளமான ரசிகர்கள் தனியார் மருத்துவமனையை சூழ்ந்தனர். அங்கு அப்பு அப்பு எழுந்திடுங்கள் எழுந்திடுங்கள், எங்களை பாருங்கள், என கதறி அழுதனர். அவரது மறைவு குறித்து அறிந்த ரசிகர்கள் 3 பேர் இறந்துவிட்டனர்.

அரசு மரியாதை

அரசு மரியாதை

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. புனித்தின் விருப்பப்படி அவரது இரு கண்களும் தானம் செய்யப்பட்டன. நாராயணா நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகத்தினர் புனித்தின் கண்களை தானமாக பெற்றனர். 2 நாட்களுக்குள் புனித்தின் கண்கள் பொருத்தப்பட்டு அவர் செய்த புனித காரியத்தால் இருவர் இந்த உலகை பார்க்க போகிறார்கள்.

Recommended Video

    திரும்ப வா Appu | Kannada Actor Puneeth Rajkumar Passed Away
    உதவி

    உதவி

    புனித் தனது வீட்டுக்கு உதவி என வந்தாலும் தன்னால் முடிந்ததை செய்வார் என்றே ரசிகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் ரசிகர்களுடன் அவர்கள் வீட்டு பிள்ளை போல் நன்றாக பழகும் குணம் கொண்டவர். அவரது தந்தை ராஜ் குமார் எப்படி ரசிகர்களுடன் நன்றாக பழகினாரோ அதே குணம் இவருக்கும் இருந்தது.

    நிறைவேறா ஆசை

    நிறைவேறா ஆசை

    இந்த புனித் ராஜ்குமாருக்கு ஒரு ஆசை இருந்ததாகவும் அது கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது என்பதை நினைத்து அவரது உறவினர்கள் வருந்துகிறார்கள். தனது அண்ணன் சிவராஜ் குமார் நடிக்கும் ஒரு படத்தை தான் இயக்க வேண்டும் என புனித்திற்கு நீண்ட நாளாகவே ஆசை இருந்தது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் தனது அண்ணன் நடிக்க திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று தனது நண்பர்களிடம் புனித் ராஜ்குமார் கூறிவந்துள்ளார். புனித் இறந்ததை அடுத்து அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+