பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீரா வீரா வாள் வீசும் கரிகாலா.. ராகுலுக்கு வினோத பிரச்சினை ! பாய்ந்தது வழக்கு! பாத யாத்திரைக்கே சிக்கல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: ராகுல் காந்தி இப்போது பெங்களூரில் பாத யாத்திரை மேற்கொண்டு உள்ள நிலையில், வித்தியாசமான பிரச்சினை ஒன்றை அவர் எதிர்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை சென்றுள்ளார். பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டவே அவர் இந்த மெகா பாத யாத்திரை செல்கிறார்.

சமீப காலங்களாகக் காங்கிரஸ் கட்சி எந்தவொரு பெரிய வெற்றியும் பெறாத நிலையில், இந்த பாத யாத்திரை காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் தருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

 சாட்டை எடுத்து அடிக்கும்போதும் பச்சை குழந்தை சிரிப்ப பாரு.. 'போதராஜு’ கதை கேட்டு சிலிர்த்த ராகுல்! சாட்டை எடுத்து அடிக்கும்போதும் பச்சை குழந்தை சிரிப்ப பாரு.. 'போதராஜு’ கதை கேட்டு சிலிர்த்த ராகுல்!

 பாத யாத்திரை

பாத யாத்திரை

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ராகுல் பாத யாத்திரைக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். கர்நாடகாவில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்திக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

 வினோத சிக்கல்

வினோத சிக்கல்

கர்நாடகாவில் பாத யாத்திரையை முடித்துக் கொண்டு இப்போது அவர் தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். இதனிடையே ராகுல் காந்திக்கு இப்போது வினோதமான பிரச்சினை வந்துள்ளது. அதாவது அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது அனுமதியின்றி கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

 கிரிமினல் புகார்

கிரிமினல் புகார்

இது குறித்து ராகுல் காந்தி உட்பட 3 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது காப்புரிமைச் சட்டத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாகப் பெங்களூரைச் சேர்ந்த மியூசிக் ரெக்கார்டிங் நிறுவனத்தின் வணிக பங்குதாரர் நவீன் குமார் என்பவர் கிரிமினர் புகார் அளித்துள்ளார். அதன்படி ராகுல் காந்தி உட்பட மூவர் மீது பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மூத்த தலைவர்கள் தடுப்பு காவல்

மூத்த தலைவர்கள் தடுப்பு காவல்

இந்த புகாரின் அடிப்படையில் ராஜ்யசபா உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் காங்கிரஸின் சமூக ஊடகங்கள் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவர் மீது குற்றவியல் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. தங்கள் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதாகவும் அதைக் காங்கிரஸ் தனது சொந்த பாடலை போலக் காட்டிக் கொண்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

 இரு விதிமீறல்

இரு விதிமீறல்

இந்த விவகாரத்தில் இரண்டு விதிமீறல்கள் நடந்துள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது முதலில் அனுமதியின்றி பாடல்களை டூப்ளிகேட் செய்து வீடியோவாக பயன்படுத்தி உள்ளனர். இரண்டாவதாக, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்த நிர்வாகிகள் அதை தங்கள் பக்கங்களிலும் பகிர்ந்து உள்ளனர். இந்த இரண்டாவது விதி மீறலுக்குத் தான் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 பாத யாத்திரைக்கு ஆபத்து

பாத யாத்திரைக்கு ஆபத்து

இந்த புகாரில் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியாவும் இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸைச் சாடியுள்ளார். இருப்பினும், இந்த புகாரால் பாத யாத்திரைக்கு எல்லாம் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 பாத யாத்திரை

பாத யாத்திரை

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தொடர்ந்து 150 நாட்களுக்கு நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 20 கிலோமீட்டர் வரை நடக்கும் வகையில் இந்த பாத யாத்திரை திட்டமிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய பாத யாத்திரையை அக்கட்சி நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

English summary
Rahul Gandhi accused of violating Copyright Act by using KGF songs Bharat Jodo Yatra: Using KGF songs in Yatra case against Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X