முதல் நாளே 5 சிக்ஸர்! பெண்களுக்கு மாதம் 2000 உட்பட 5 மாஸ் வாக்குறுதிகளுக்கும் கர்நாடக அரசு ஒப்புதல்
பெங்களூர்: பெண்களுக்கு மாதம் ரூ.200 ஆயிரம், 200 யூனிட் மின்சாரம், மகளிருக்கான இலவச பேருந்து பயணம் உள்பட கர்நாடகா தேர்தலின்போது அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கும் இன்றே அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனால் கர்நாடக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடா முதல்வராக இன்று சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் ஊழல் அரசியலையும், வெறுப்பு அரசியலையும் நீங்கள் (மக்கள்) தோற்கடித்து உள்ளீர்கள். வெறுப்பை புறம்தள்ளிவிட்டு அன்புக்கு ஓட்டளித்துள்ளனர். தேர்தல் சமயத்தல் நாங்கள் 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம். இந்த 5 வாக்குறுதிகளும் அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு சட்டப்படி செயல்படுத்தப்படும்.
நாங்கள் முதல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்குவதை அறிவித்தோம். 2வது வாக்குறுதி என்பது வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கூறினோம். 3வது வாக்குறுதியாக அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம் என்றோம்.
4வது வாக்குறுதியாக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் என்பதை தெரிவித்தோம். 5வது வாக்குறுதியாக டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்குவதாக அறிவித்தோம்.
நாங்கள் பொய் வாக்குறுதிகளை கொடுப்பது இல்லை. கொடுத்த வாக்குறுதிப்படி நடப்போம். சில மணிநேரங்களில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி 5 வாக்குறுதிகளும் சட்டப்படி செயல்படுத்தப்படும். காங்கிரஸ் கட்சி எப்போதும் சொல்வதை தான் செய்யும்.
இந்த காங்கிரஸ் அரசு விவசாயிகள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஆதரவாக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு இருக்கும். ஊழல் இல்லாத அரசை கொடுப்போம் என உறுதியளிக்கிறோம். நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளீர்கள். இதனை நாங்கள் மறக்கவே மாட்டோம். கர்நாடகா அரசு மக்களின் அரசாக இருக்கும்'' என பேசினார்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications