RS Poll: காங். மேல செம்ம லவ்... அதான் ஓட்டுப் போட்டேன்.. குமாரசாமியை கதறவிட்ட ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.
பெங்களூர்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) எம்.எல்.ஏ. ஶ்ரீனிவாச கவுடா, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டதாக பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இந்த 4 இடங்களுக்கு மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக தரப்பில் 3; காங்கிரஸ்-2; ஜேடிஎஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியது.
இதில் காங்கிரஸ் மீது ஜேடிஎஸ் சரமாரியாக குற்றம்சாட்டி வருகிறது. ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் வளைத்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கடுமையாக விமர்சித்தும் வருகிறார். ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களுக்கு சித்தராமையா பகிரங்கமாக வேண்டுகோள் கடிதமும் எழுதியிருந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கர்நாடகா ராஜ்யசபா தேர்தல் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் குமாரசாமியி ஜேடிஎஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு கட்சி மாறி ஓட்டுப் போட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. ஶ்ரீனிவாச கவுடா, காங்கிரஸ் மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது; அதனால் நான் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தேன் என பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இதனால் கொந்தளித்துப் போன குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த தமது கட்சி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்க வேண்டிய காங்கிரஸும் ஜேடிஎஸ்ஸும் ராஜ்யசபா சீட்டுக்காக மோதிக் கொண்டிருப்பது பாஜகவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குமாரசாமி கொந்தளிப்பு
தமது கட்சி எம்.எல்.ஏ. கட்சி மாறி ஓட்டுப் போட்டது குறித்து குமாரசாமி கூறியதாவது: 2 எம்.எல்.ஏக்கள் ஜேடிஎஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடவில்லை. ஶ்ரீனிவாச கவுடா வெளிப்படையாகவே காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டேன் என்கிறார். காங்கிரஸ் தமது நிஜ முகத்தை காட்டிவிட்டது. காங்கிரஸ் கட்சி பாஜகவின் பி டீம்.. நாட்டில் பாஜகவை வளரவிட்ட குற்றவாளியே காங்கிரஸ்தான் என்றார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications