பொது விடுமுறை வேண்டும் சிஎம் சார்.. கர்நாடகா முதல்வருக்கு ஆர்சிபி ரசிகர் கடிதம்
பெங்களூர்: ஆர்சிபி அணி கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 3 முறை இறுதிப் போட்டியில் கோப்பையை நழுவவிட்ட அந்த அணிக்கு முதல்முறையாக சாம்பியன் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றால், அதை கொண்டாடும் வகையில் அரசு பொது விடுமுறை வழங்க வேண்டும் என அந்த அணி ரசிகர் ஒருவர் கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது பரபரப்பான பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாப், பெங்களூர், குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் இந்த சீஸனின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை மும்பை, சென்னை அணிகளுக்குதான் ரசிகர்கள் அதிகம்.

மும்பை, சென்னை போலவே பெங்களூர் அணிக்கும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். ஆனால் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் ஒருமுறை கூட கோப்பையை வென்று சாம்பியன் ஆனதில்லை. இதனிடையே நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களுர் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
பெங்களூர் அணி ஏற்கனவே 2009, 2011, 2016 ஆகிய மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் அந்த 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. இந்த சீஸனில் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இ சாலா கப் நம்தே என்று ஆர்சிபி அணியை மற்ற அணிகளின் ரசிகர்கள் கலாய்ப்பது வழக்கம். அந்த நிலை மாறி பெங்களூர் அணி சாம்பியன் ஆவதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி அகமாதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி களமிறங்க உள்ளது. விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் பலரும் அந்த நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஆர்வ மிகுதியில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். பெல்காவி பகுதியைச் சேர்ந்த சிவானந்த் மல்லான்வர் என்ற பெங்களூர் ரசிகர் சித்தராமையாவுக்கு கன்னட மொழியில் எழுதியுள்ள கடிதத்தில், "ஆர்சிபி இந்த வருடம் வெற்றி பெற்றால் அதை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இந்த கொண்டாட்டம் கர்நாடகாவில் புகழ் பெற்ற ராஜ்யோத்சவா பண்டிகைக்கு இணையானது.
இதை ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் வகையில் அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அரசு ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தை ரசிகர்கள் கொண்டாட அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார். அவர் கைப்படி எழுதியுள்ள இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல சண்டிகர் மைதானத்தில் நேற்றைய போட்டியில் ஒரு ஆர்சிபி பெண் ரசிகர், பெங்களூர் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறாவிடின் நான் என் கணவரை விவாகரத்து செய்துவிடுவேன் என்று பதாகையை ஏந்தி வைரலானார். ஆர்சிபி அணியின் இந்த செயல்பாடுகளை மற்ற அணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications