RCB அணியை வாங்கும் கர்நாடகா தொழிலதிபர்கள்? யார் இந்த ரஞ்சன் பாய் - நிகில் காமத்.. முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனாக ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. 18 சீசன்களில்முதல் முறையாக அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் தான் ஆர்சிபி அணி அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் அதை விற்பனை செய்ய அதன் உரிமையாளராக இருக்கும் ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆர்சிபி அணியை வாங்க போட்ட போட்டி நடக்கும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் வாங்கலாம் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் சீசனில் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்று ஆர்சிபி எனும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. ஆனால் இந்த அணிக்கு அதிர்ஷ்டம் என்பது இல்லாமலே இருந்தது. கடந்த 17 சீசன்களில் ஒருமுறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மனம்தளரவில்லை.

rcb-for-sale-karnataka-billionaires-ranjan-pai-and-nikhil-kamath-likely-to-buy-the-royal-challenger

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ‛இ சாலா கப் நம்தே' (இந்த முறை கோப்பை எங்களுக்கு) என்ற கோஷத்துக்கு ஆர்சிபி அணியை உற்சாகப்படுத்துவார்கள். இந்த நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு 18 வது சீசனின் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் 18 வது சீசன் பைனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த மகிழ்ச்சியை ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் மறுநாளே பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர். இது அனைவரையும் சோகத்தில் தள்ளியது. போதா குறைக்கு ஆர்சிபி அணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.

தற்போது ஆர்சிபி அணியின் உரிமையாளராக ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் உள்ளது. இது Diageo நிறுவனத்தின் கீழ் வருகிறது. இந்த நிறுவனம் பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமாகும். ஆர்சிபி அணி விற்பனை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியாகி உள்ளது. ஆர்சிபி அணியின் தற்போதைய மதிப்பு என்பது 2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,859 கோடியாக உள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் ஆர்சிபி அணியை வாங்க பல தொழிலதிபர்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணியை விட அதிக மதிப்பு ஆர்சிபி அணிக்கு தான் உள்ளது என்பது தான் இதற்கு காரணம். இந்நிலையில் தான் ஆர்சிபி அணியை வாங்க உள்ளவர்களின் பட்டியலில் கர்நாடகாவை சேர்ந்த 2 தொழிலதிபர்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆர்சிபி அணி கர்நாடகா தலைநகர் பெங்களூருவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால் கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இப்படியான சூழலில் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர்களே அணியை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் 2 பெரும் கோடீஸ்வரர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது. அதில் முதல் பெயர் ரஞ்சன் பாய். 2வது பெயர் நிகில் காமத். இவர்கள் 2 பேரும் கர்நாடகாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள் என்ற நிலையில் ஒன்று சேர்ந்து அணியை வாங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதில், ரஞ்சன் பாய், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் மணிப்பாலை சேர்ந்தவர். அடிப்படையில் டாக்டரான இவர் மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவ குழுமத்தின் (Manipal Education and Medical Group or MEMG)தலைவராக உள்ளார். இந்த குழுமம் 6 பல்கலைக்கழகங்கள் மற்றும் 28 மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் இந்த குழுமத்துக்கு மருத்துவமனைகள் உள்ளன. இப்போது இந்த குழுமத்தின் சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால் ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.42 ஆயிரம் கோடியாகும்.இதில் ரஞ்சய் பாய்க்கு மட்டும் ரூ.2.8 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.24,834 கோடி) சொத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

அதேபோல் நிகில் காமத்தும் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் பிறந்து உடுப்பி மாவட்டம் உத்யவராவில் வளர்ந்தார். கொங்கனி மொழி பேசும் பிரமாண குடும்பத்தை சேர்ந்தவர். சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் ச இவர் ஜெரோதா (பங்கு சந்தை முதலீட்டு நிறுவனம்) மற்றும் ட்ரூ பீக்கன் நிறுவனங்களின் இணை நிறுவனராக உள்ளார்.

இவரது சொத்துமதிப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்று ஃபோர்ப்ஸ் மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி பார்த்தால்அவரது சொத்து மதிப்பு ரூ.21,840 கோடியாகும் அதேபோல் அவரது சகோதரர் நிதினும் பெரும் கோடீஸ்வரராக உள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஃபோர்ப்ஸின் 2024 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும் தற்போது வரை ரஞ்சன் பாய், நிகில் காமத் ஆகியோர் தரப்பில் இருந்து ஆர்சிபி அணியை வாங்குவது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+