ரூ. 662000 கோடி மதிப்புள்ள வேலையை உதறிய ரோஹன் மூர்த்தி! இவர் யார் மகன் தெரியுமா?
பெங்களூரு: உலக அளவில் மிகப்பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியாக அடையாளம் காணப்படும் இன்ஃபேசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி, அந்தப் பதவியிலிருந்து விலகிக்கொண்டு தனக்கு என ஒரு சொந்தப் பாதையை உருவாக்கியுள்ளது பலரது புருவத்தை உயரச் செய்துள்ளது.
இந்தியப் பணக்காரர்களில் ஒருவர் என்.ஆர்.நாராயண மூர்த்தி. விரித்து எழுதினார், நாகவர ராமராவ் நாராயண மூர்த்தி. இவர் கட்டி எழுப்பிய இன்ஃபோசிஸ் நிறுவனர் இன்று சாஃப்ட்வேர் துறையில் மிக முக்கியமான கம்பெனி இந்த நிறுவனத்தின் ஏழு இணை நிறுவனங்களில் ஒருவர் என இவரைப் பற்றிய அதிகாரப்பூர்வ டாக்குமெண்ட் தகவல்கள் கிடைத்தாலும், அதன் முகமாக இவரே இருந்து வருகிறார். இதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுனத் தலைவர்.

அதன்பின்னர் தலைமைச் செயல் அதிகாரி. படிப்படியாகத் தனது வயது ஏற ஏற அவர் தன் பொறுப்புகளை இளம் தலைமுறை கையில் மாற்றிக் கொடுத்துவிட்டார். இவரது நிறுவனத்தின் நிகர மதிப்பு 4 பில்லியனுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஃபோர்பஸ் பத்திரிகையின் தகவல்படி உலகில் 711 ஆவது பணக்காரர். உலக அளவில் உள்ள ஆயிரம் பணக்காரர்களின் பட்டியலுக்கு வந்துள்ளார் என்றால் சின்ன விசயம் இல்லை. அது மாபெரும் சாம்ராஜ்ஜியம்.
தன் கணவரின் அடையாளத்துடன் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் தனித்து இயங்கி வரும் சாதனைப் பெண் இவர். கல்வியாளர், எழுத்தாளர், சமூக சேவகி. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் பணத்திலிருந்து பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா மூர்த்தி இப்போது ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அக்ஷதா மூர்த்தி, ரோஹன் மூர்த்தி.
டிஎன்ஏ இந்தியாவின் தரவுகளின் இந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ. 662000 கோடி மூலதனத்துடன் நாட்டில் மிகப்பெரிய ஐடி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. அதில் எப்படியாவது வேலை கிடைத்துவிடாதா? என்று லட்சக் கணக்கான இளைஞர்கள் கனவு கண்டு வருகின்றனர். தங்களின் வாழ்நாள் இலக்காகக் கூட அதைக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில்தான், நாராயண மூர்த்தி தனது நான்கு மாத பேரக் குழந்தையான ஏகாகிர மூர்த்திக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளைப் பரிசாகக் கொடுத்தார். அந்தச் செய்திகூட ஊடகங்களில் வெளியானது. இப்போது அந்தச் செய்தியைவிட நெட்டீசன்கள் அவரது மகன் ரோஹன் மூர்த்தியைப் பற்றி அதிகம் ஆர்வத்தைக் காட்டிவருகின்றனர். இவர் தனது பெற்றோரின் கொள்கையைப் பின்பற்றி புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்.
ஆட்டோமேஷனில் நிபுணத்துவம் பெற்ற இவர், டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிறுவனமான சொரோகோவின் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி. கார்னெல் பல்கலைக்கழகத்தில் பி.எஸ் படித்த இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி முடித்தவர். தனது பிஹெச்டி படிப்பை முடித்த பிறகு ரோஹன் மூர்த்தி, தனது தந்தை கட்டி எழுப்பிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
இருந்தாலும், அந்த வேலை அவரது மனதிற்கு நெருக்கமாக இல்லை. அப்பா உருவாக்கிய ஒரு நிறுவனத்திற்குள் சுருக்கி உட்கார்ந்திருக்கிறோம் என நினைத்தார். அந்த எண்ணம் அவரை தனக்கென சொந்த பாதையை உருவாக்க உத்வேகம் கொடுத்தது. ஆகவே பாதுகாப்பான தனது தந்தை நிறுவனத்தில் இன்ஃபோசிஸில் துணைத் தலைவர் பதவியை விட்டுவிட்டார்.
அவரது தாயார் சுதா மூர்த்தி, சமூக சேவையால் ஈர்க்கப்பட்ட ரோஹன் மூர்த்தி, AI நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்டோமேஷனில் நிபுணத்துவம் பெற்ற டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிறுவனமான சொரோகோவை உருவாக்கினார். ரோஹன் மூர்த்தி தற்போது நிறுவனத்தின் CTO (Chief technology officer) ஆக இருந்து வருகிறார்.
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் Astrophysics and planetary science துறையில் பேராசிரியரான உள்ள அவரது தாய்மாமா ஸ்ரீனிவாஸ் குல்கர்னி செய்து வரும் பணிமீது ரோஹனுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. சொல்லப்போனால் உலக பணக்காரர் அப்பாவைவிடத் தாய்மாமாவின் தொழில்நுட்ப அறிவு அவரைக் கவர்ந்தது.
ரோஹன் மூர்த்தி ஒரு சில்வர் ஸ்பூன் பேபி. உலக செல்வந்தரின் வாரிசு. இன்ஃபோசிஸ் என்ற சாம்ராஜ்ஜியத்தின் தளபதி. இவர் தனது பட்டப் படிப்புக்காக அமெரிக்கா போவதற்கு முன்பு பெங்களூரிலுள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில்தான் படித்தார். ரோஹன் மூர்த்தி இன்ஃபோசிஸின் 1.67 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
இதன் மூலம் அவரது வருமானமான ரூ.106.42 கோடியை பெறுகிறார் எனச் சொல்லப்படுகிறது. இவரது மூத்த சகோதரி அக்ஷதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்துள்ளார் என்பது கூடுதலாகச் சொல்ல வேண்டிய செய்தி. இப்போது நடந்துள்ள இங்கிலாந்து தேர்தலில் ரஷி கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications