ஒரே வாரத்தில் பர்ஸ் மொத்தமாக காலி! புலம்பி தள்ளிய பெங்களூர் நபர்.. சப்போர்ட்டிற்கு வந்த நெட்டிசன்கள்
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதாகப் பலரும் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நெட்டிசன் பதிவிட்டு ஒரு ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூருக்கு வந்து ஒரே வாரத்தில் தனக்கு ரூ.30 ஆயிரம் செலவாகி இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவின் ஐடி தலைநகராக பெங்களூர் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பெங்களூரில் குடியேறி வருகிறார்கள். அதேநேரம் பெங்களூரில் செலவுகளும் அதிகரித்து வருகிறது. இதனால் சராசரி சம்பளம் வாங்கும் ஒருவர் வாழவே மிகவும் சிரமப்படும் நகரமாக பெங்களூர் மாறியுள்ளது.

புலம்பிய நெட்டிசன்கள்
இதற்கிடையே பெங்களூரில் புதிதாகக் குடியேறிய ஒருவர், முதல் ஒரு வாரம் தனக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருக்கு வந்தது முதலே தனக்கு அதிக செலவு ஆகிவிட்டதாகவும் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை என்றும் அந்த நபர் புலம்பி இருக்கிறார்.
கிட்டத்தட்ட ரூ.40,000 செலவு
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "பெங்களூருக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. வாடகைக்கு ₹18 ஆயிரத்திற்கும் அதிகமாகச் செலவாகிவிட்டது. அதேபோல உணவுக்காக ₹12 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் செலவழித்தேன். பெங்களூர் நகர வாழ்க்கை மலிவானது அல்ல.. என் செலவுப் பழக்கங்களும் சரியில்லை என்றே நினைக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் இந்திர நகர், HSR, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற பல பகுதிகளை ஆய்வு செய்த பின்னரே HSR பகுதியில் அனைத்து வசதிகளும் இருக்கும் ஒரு ஃபிளாட்டைக் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "இந்திர நகர், HSR, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தேன். HSRஇல் தங்கப் போகிறேன்.. ஒரு நல்ல ஃபிளாட் கிடைத்தது. நடந்து செல்லும் தூரத்தில் எல்லாமே கிடைக்கிறது" என்று அவர் கூறினார்.
நெட்டிசன்கள்
அவரது இந்த போஸ்ட்கள் தான் இணையத்தில் டிரெண்டாது. செலவு குறித்த இவரது போஸ்டும் சரி, வீடு குறித்த போஸ்டும் சரி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "உங்களுக்கு எப்படி ₹18kக்கு ஒரு பிளாட் கிடைத்தது?" என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு நபர், "HSR ஸ்டார்ட்அப்களுக்கான மையம் என்பதால் வேலைக்குச் சரியாக இருக்கும்.. வீக் எண்டில் வெளியே செல்லவும் பல இடங்கள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
என்ன மேட்டர்
இன்னொரு நபர், "பெங்களூருக்கு வரவேற்கிறோம். ₹18k உண்மையில் மிகவும் குறைவான செலவு தான். நான் பெல்லந்தூரில் வசிக்கிறேன், அங்கு விலைகள் விண்ணை முட்டுகின்றன," என்று பதிவிட்டார்.. மற்றொரு நபர், "பெங்களூரில் வாடகை மற்றும் செலவுகள் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் செலவுகள் விண்ணை முட்டுகின்றன... ஏதோ தவறு உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.
அந்தநேரம் மற்றொரு நபர் பாசிட்டிவாகவும் பதிவிட்டுள்ளார். வேலை செய்வதற்கு பெங்களூரு ஒரு சிறந்த இடம் என்று அவர் விவரித்தார். அவர் மேலும், "நீங்கள் வேலையில் வளர பெங்களூர் தான் சிறந்த இடம். பெங்களூர் வந்தால் நிச்சயம் அது நல்ல எதிர்காலத்தை உங்களுக்குத் தரும். இதுபோல வேறு எந்தவொரு நகரமும் இருப்பதாகத் தெரியவில்லை" என்றார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications