போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்னணி நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து விசாரணைக்கு பின்னர் நடிகை சஞ்சனா கால்ரானியை வீட்டில் சோதனை நடத்தி செப்டம்பர் 8 ஆம் தேதியும், நடிகை ராகினி திவேதியை செப்டம்பர் 14 தேதியும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் வீரன் கண்ணா, ரவிசங்கர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைபொருள்

போதைபொருள்

இதனிடையே போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 9 பேரை போலீசார் தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நடிகைகள் 2 பேரும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது பற்றி தகவல் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்

இதற்கிடையே சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் பெங்களூருவில் 1 வது ஏசிஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலை வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நடிகை சஞ்சனா கல்ராணி, வீரன் கண்ணா, ரவிசங்கர் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

ஜாமீன் மனு

ஜாமீன் மனு

முன்னதாக, செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் 14 நாள் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் ஜாமீனுக்காக விண்ணப்பித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 19 க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் முதுகுவலிக்கு சிகிச்சை பெற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது.

சோதனையில் தெரியும்

சோதனையில் தெரியும்

ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு அண்மையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் அவர்கள் போதை மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்களா என்பது சோதனையில் அறிய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+