சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்... அதிதீவிர நுரையீரல் தொற்று - விக்டோரியா மருத்துவமனை

சசிகலாவிற்கு கடும் நிமோனியா காய்ச்சல் உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    பெங்களூரு: முதலில் நெகட்டிவ்.. அப்புறம் ‘பாசிட்டிவ்’.. கொரோனா பிடியில் சசிகலா… ஐசியூவில் கண்காணிப்பு..!

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக்காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார் சசிகலா.

    Sasikala health issue: Severe pneumonia fever with type 2 diabetes says Victoria Hospital

    இந்த சூழலில் நேற்றுமுன்தினம் சசிகலாவுக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    முதலில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அதில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக கொரோனா வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    Sasikala health issue: Severe pneumonia fever with type 2 diabetes says Victoria Hospital

    இன்று காலையில் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சசிகலாவிற்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு 95 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு கொரோனா தொற்றுடன் இணை நோய்களும் இருப்பதால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார் சசிகலா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+