பாகிஸ்தானுடன் மேட்சா? கர்நாடகாவில் பாக். கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!
பெங்களூர்: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று ஆசிய கோப்பை போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்க கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியை எரித்து, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என பொதுமக்கள் முழக்கமிட்டிருக்கின்றனர்.
கர்நாடகா மட்டுமல்லாது, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. உத்தவ் சிவசேனா தலைவர் ஆனந்த் துபே, துபாயில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்தும்படி, சோனி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், "துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் 2025 இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியை நேரலையில் ஒளிபரப்புவதற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறோம். இப்போட்டி இந்தியாவில் ஒளிபரப்பப்படக் கூடாது. உங்களிடமிருந்து விரைவான மற்றும் நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறோம்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை பாகிஸ்தான் தொடுத்தது. இந்தியா இதனை வெற்றிகரமாக தடுத்தது.
ஒரு கட்டத்தில் சோர்வடைந்த பாகிஸ்தான் சர்வதேச அழுத்தம் காரணமாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்தது. இந்நிலையில் இப்படி சண்டை போட்ட நாடுகளுடன் எதற்கு விளையாட வேண்டும் என்று வலதுசாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும், இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications