Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்ரேஷன் தியேட்டரில் மதுபோதையில் தள்ளாடிய டாக்டர்.. அப்படியே மயங்கி விழுந்து.. கர்நாடகாவில் பரபர

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் போதையில் ஆப்ரேஷன் தியேட்டரிலேயே தள்ளாடி மயங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்மை எப்போதும் நலமுடன் வைத்திருப்பதில் மருத்துவர்களின் பங்கு மகத்தானது. உடலில் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் முதலில் செல்வதை மருத்துவர்களிடம் தான்.. அவர்கள் நமது உடலைப் பரிசோதனை செய்து அளிக்கும் மருந்துகளே நம்மைக் காக்கிறது.

 shocking incident as Drunk doctor at Chikkamagaluru hospital collapses before surgeries

உயிர் பிழைப்பதே கடினம் என்று இருந்தவர்களையும் பல மருத்துவர்கள் காப்பாற்றியே உள்ளனர். இதன் காரணமாகத் தான் மருத்துவர்களை அனைவரும் தெய்வத்திற்கு இணையாகப் பார்க்கிறார்கள்.

மருத்துவர்: ஆனால், சில மருத்துவர்கள் செய்யும் மோசமான செயல் பெரிய களங்கத்தை அத்துறைக்கே ஏற்படுத்திவிடுகிறது. அதுபோல ஒரு மோசமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்கே மருத்துவமனையில் பல ஆப்ரேஷன்களை செய்ய வேண்டிய மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன், திடீரென ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூருவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் ஒன்பது பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்துள்ளது. அந்த ஒன்பது நோயாளிகளும் பெண்கள் ஆவர். அவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால், அன்று ஆப்ரேஷன் செய்ய வேண்டிய மருத்துவரை எங்குத் தேடினாலும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவ ஊழியர்கள் பதற்றமடைந்தனர். கடைசியில் அந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ளேயே காலை முதல் தூங்கிக் கொண்டிருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

போதை: இது ஒரு பக்கம் இருக்க மதியம் 2 மணிக்கு ஆப்ரேஷன் நடக்க இருந்த நிலையில், நோயாளிகளுக்குக் காலை 8 மணிக்கே மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக டாக்டர் ஆப்ரேஷன் செய்ய ரெடியாகி வந்துள்ளார். சில நிமிடங்களில் ஆப்ரேஷன் தொடங்கும் என்ற நிலையில், திடீரென டாக்டரே மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி.

ஏனென்றால், அப்போது அவரை செக் செய்து பார்த்ததில் தான் அவர் ஓவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. மருத்துவமனைக்கே அதுவும் 9 பேருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நாளில் மது குடித்துப் பொறுப்பே இல்லாமல் வந்த இந்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவரின் அலட்சியப் போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சாடி வருகின்றனர்,

கடும் நடவடிக்கை: மேலும், அந்த மருத்துவர் இதுபோல மருத்துவமனைக்கு மது குடித்து வருவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை இப்படி மது குடித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஓரிரு முறை நிர்வாகத்திடமும் மாட்டியுள்ளார்.

நோயாளிகளின் உயிரில் அந்த மருத்துவர் விளையாடுவதை ஏற்க முடியாது என்று வலியுறுத்தியுள்ள உறவினர்கள், அந்த குறிப்பிட்ட மருத்துவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆப்ரேஷன் செய்ய சில நிமிடங்களே இருந்த நிலையில், அப்போது மருத்துவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+