கர்நாடக மாஜி முதல்வர் சித்தராமையாவின் பயோபிக்.. விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டம்! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட உள்ளதாகவும், இதில் சித்தராமையாவாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அவரை அணுக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் மூத்த அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் சித்தராமையா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஆவார். தற்போது சித்தராமையாவுக்கு வயது 75 ஆகும்.

மைசூரு மாவட்டத்தை சேர்ந்த சித்தராமையா சட்டப்படிப்பை முடித்துள்ளார். வழக்கறிஞராக இருந்த இவர் அரசியலில் நுழைந்தார். 1983 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

முதலமைச்சராக சித்தராமையா

முதலமைச்சராக சித்தராமையா


பாரதிய லோக் தளம் மூலம் அரசியலில் நுழைந்த சித்தராமையா அதன்பிறகு ஜனதா கட்சியில் சேர்ந்து செயல்பட்டு பல்வேறு துறைகளை அமைச்சராக நிர்வகித்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இணைந்து துணை முதலமைச்சரானார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா முதலமைச்சரானார். 2013 முதல் 2018 வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் சித்தராமையா முதலமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக...

எதிர்க்கட்சி தலைவராக...

இருப்பினும் பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்றார். சில நாட்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன்பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி முதலமைச்சரானார். சித்தராமையாக சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக செயல்பட்டார். இதற்கிடையே தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. எடியூரப்பாவை தொடர்ந்து தற்போது பசவராஜ் பொம்மை முதலமைச்சராக உள்ளார். சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

மீண்டும் முதல்வராக முயற்சி

மீண்டும் முதல்வராக முயற்சி

கர்நாடக சட்டசபைக்கு 2023ல் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக சித்தராமையா உள்ளார். வரும் சட்டசபை தேர்தல் தான் கடைசி தேர்தல் என கூறியுள்ள சித்தராமையா மீண்டும் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தி முதலமைச்சர் பதவியை பெற திட்டமிட்டுள்ளார். காங்கிரஸில் முதலமைச்சர் பதவியை பெற சித்தராமையுடன், அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார் போட்டியில் உள்ளார்.

சித்தராமையா ‛பயோபிக்’

சித்தராமையா ‛பயோபிக்’

இந்நிலையில் தான் சித்தராமையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு சித்தராமையா பயோபிக் எனும் திரைப்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் சித்தராமையா ஒப்புதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதுதொடர்பாக சித்தாரமையாவிடம் அனுமதி பெற்று இன்னும் சில நாட்களில் திரைப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

விஜய் சேதுபதி அணுக முடிவு

விஜய் சேதுபதி அணுக முடிவு

இந்நிலையில் சித்தராமையின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் சித்தராமையாவாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியான பிறகு நடிகர் விஜய் சேதுபதியை அவர்கள் அணுகலாம். இதற்கு விஜய் சேதுபதி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் நடக்கும்.

யார் இந்த சித்தராமையா?

யார் இந்த சித்தராமையா?

சித்தராமையா 1983ல் பாரதியா லோக் தளம் சார்பில் மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவானர். அதன்பிறகு அவர் ஜனதாகட்சியில் இணைந்து செயல்பட்டார். இதையடுத்து அவர் கன்னட கண்காணிப்பு குழுவின் முதல் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1985ல் நடந்த தேர்தலில் அதேதொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வாகை சூடினார். முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டேவின் அரசில் பட்டுவளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 1989 தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து ஜனதாதளம் கட்சியில் இணைந்து பொதுச் செயலாளர் பதவியை பெற்றார்.

பாஜகவுக்கு எதிராக பாதயாத்திரை

பாஜகவுக்கு எதிராக பாதயாத்திரை

1994 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, தேவேகவுடாவின் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். 1996ல் ஜேஎச் படேல் முதலமைச்சராக இருந்தபோது சித்தாராமையா துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்து மாநில தலைவரானார். 1999 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2004ல் தரம் சிங்(காங்கிரஸ்) முதலமைச்சரானபோது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் சித்தராமையா மீண்டும் துணை முதலமைச்சரானார். அதன்பிறகு ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சித்தராமையா புதிய கட்சியை துவங்கினார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்தார். கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக சித்தராமையா பாதயாத்திரை சென்றார். 2013 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது சித்தராமையா முதல்வரானார்.

மூடநம்பிக்கைக்கு எதிரானவர்

மூடநம்பிக்கைக்கு எதிரானவர்

அதன்பிறகு கடந்த 2018 தேர்தலில் சித்தாராமையா தான் வென்ற மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் மகன் யதீந்திராவுக்காக விட்டு கொடுத்தார். சித்தாராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில் பாதாமி எம்எல்ஏவாகவும், எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 5க்கும் அதிகமான முறை எம்எல்ஏவாகி உள்ளார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர். கன்னட மொழி மீது தீவிர பற்று கொண்ட இவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கடுமையாக விமர்சனம் செய்து பாஜகவை தாக்கி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+