களைகட்டுது கச்சேரி.. பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த கூட்டம் கர்நாடகாவில் பெங்களூர் நகரில் ஜூலை 17,18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூறிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒத்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் பெங்களூர் கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். ஜூலை 17-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும். பின்னர் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து 18-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார்.
இதனிடையே பெங்களுர் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வருகை தரக் கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் கூறுகையில், ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஜூலை 12-ல் காங்கிரஸ் கட்சி அமைதிப் போராட்டத்தை நடத்த உள்ளது. நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் ஜூலை 17,18-ல் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தியும் பங்கேற்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று, பெங்களூர் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications