Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னடம் பேசு.. கன்னடம் பேசு.. தமிழ் இளைஞரை பஸ்சில் வைத்து தாக்கிய கும்பல்.. அதிர்ச்சி வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அத்திபெலேவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வீலிங் செய்து தனியார் டூரிஸ்ட் பஸ்சில் இருந்து இறங்கிய தமிழ் இளைஞர் மீது மோதுவது போல் சென்ற கும்பல், ‛‛கன்னடம் பேசு.. கன்னடம் பேசு..'' என்று கூறி அவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர். அதேபோல் தினமும் தமிழகத்தை சேர்ந்த பல ஆயிரம் பேர் வேலை உள்பட பல்வேறு காரணங்களுக்காக பெங்களூர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ் பேசும் இளைஞரிடம், ‛‛கன்னடம் பேசு.. கன்னடம் பேசு..'' என்று கூறி பஸ்சில் வைத்து ஒரு கும்பல் தாக்கி உள்ளது.

speak-kannada-speak-kannada-a-2-member-gang-attacked-a-tamil-man-on-a-bus-in-attibele-beng

இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பேசுகிறார். சம்பவ இடத்தில் நடந்த விஷயத்தை அவர் கன்னடத்தில் பேசுகிறார்.

அந்த வீடியோவில் ‛‛இந்த மாதிரி நபர்களால் தான் கன்னடர்களுக்கு கெட்டப்பெயர் வருகிறது. இன்று அத்திபெலேவில் உள்ள தனியார்பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம் இது. இந்த டூரிஸ்ட் பஸ்சில் வந்த ஒருவர் கழிவறைக்கு சென்று வந்தார். அப்போது வீலிங் செய்தபடி வந்தவர்கள் அவர் மீது பைக்கில் மோத சென்றனர்.

இந்த வேளையில் அந்த நபர் (தமிழ் நபர்) அவர்களை திரும்பி பார்த்தார். இதனால் கோபமானவர்கள் ‛‛ஹே கன்னடா பேசு'' என்று கூறினர். அவர் தமிழ் பேசும் நபர். அதுவும் டிராவலர். அவரிடம் போய், ‛‛கன்னடத்தில் பேசு.. கன்னடத்தில் பேசு'' என்று சீன் போட்டு பஸ்சில் ஏறி தாக்கிவிட்டு வந்துள்ளனர்.

இந்த இடத்தில் தான் அவர்கள் வீலிங் செய்தனர். பெட்ரோல் பங்கிற்கு மக்கள் வந்து சென்றாலும் கூட அவர்கள் வீலிங் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த நபரை ஏன் தாக்க வேண்டும்? அந்த நபர் திரும்பி பார்த்ததற்கு தாக்கிவிட்டு வந்துள்ளார்கள். பெங்களூரில் பல ஆண்டுகள் இருந்து கன்னடம் பேசவில்லை என்றால் அவர்களிடம் கேட்கலாம். பரவாயில்லை.

அதை விட்டுவிட்டு டூரிஸ்ட் பஸ்சில் வந்து ‛வாஷ்ரூம்' சென்று வந்தவரிடம், ‛கன்னடம் பேசு.. கன்னடம் பேசு..' என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும்? பெங்களூர் சிட்டி போலீஸ் தயவுசெய்து இந்த விவகாரத்தை கவனியுங்கள். இந்த சம்பவம் 13.12.2025 இரவு 12.20 மணிக்கு நடந்த சம்பவம். அத்திபெலே பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம் இது. இவர்கள் 2 பேருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் பெங்களூர் சிட்டி போலீசாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‛டேக்' செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் வீலிங் செய்து அப்பாவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூர் போலீசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+