தென் மாவட்டங்கள் டூ பெங்களூர்.. 3 நாட்களுக்கு குஷி.. இதுதான் சிறப்பு பஸ்களின் டைமிங்.. செம அறிவிப்பு
பெங்களூரு : ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.. அதேபோல, ஆயுத பூஜை, தசராவையொட்டி பெங்களூரிலிருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
வரும் 11ம் தேதி ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இன்று 700, நாளை 2,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முக்கிய நகரங்களில் இருந்து, பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 225 பேருந்துகளும், நாளை அதாவது வியாழக்கிழமை 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: அதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று 35 பஸ்களும், நாளை 265 பஸ்களும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இன்றும் நாளையும் 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், இதையொட்டி அரசு பஸ்களில் பயணிக்க, சென்னையில் 25,000 பேர் என மொத்தம், 45,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மாவட்டங்கள்: இந்நிலையில், ஆயுத பூஜை, தசராவையொட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, எஸ்இடிசி என்னும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கணிசமாக வசித்து வருகின்றனர். ஆயுத பூஜை, தசராவையொட்டி, தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, எஸ்இடிசி மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் உத்தரவின்படி, இன்று முதல் 11ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
செங்கோட்டை: தமிழக தென்மாவட்டங்கள், சென்னை, கோவை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்தவகையில், மதுரைக்கு இரவு 9:15; 10:45; 11:00 மணிக்கும், நெல்லையில் மாலை 6:50; இரவு 8:30 மணிக்கும், செங்கோட்டைக்கு மாலை 6:00 மணிக்கும் சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன.
தூத்துக்குடிக்கு மாலை 5:15 மணி, நாகர்கோவிலுக்கு இரவு 7:00 மணி, மார்த்தாண்டத்துக்கு மாலை 6:00 மணி, வேளாங்கண்ணிக்கு இரவு 8:00 மணி, புதுச்சேரிக்கு இரவு 8:30, இரவு 9:30 மணிக்கு, கோயம்புத்துாருக்கு இரவு 9:00, இரவு 9:45, இரவு 10:00 மணிக்கும், காரைக்குடிக்கு இரவு 8:00 மணிக்கும் பஸ்கள் புறப்படுகின்றன.
ஆன்லைன் டிக்கெட்: சென்னைக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆன்லைன் டிக்கெட்டை www.setc.in என்ற இணைய முகவரியில், முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications