‛114’.. கர்நாடகாவில் பாஜக ஆட்சி? 20 நாளில் மாறிய டிரெண்ட்! காங்கிரசுக்கு ஷாக்.. புது கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக சுவர்ணா நியூஸ் 2வது கருத்து கணிப்பை நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது கருத்து கணிப்பை ஒப்பிடும்போது கடந்த 20 நாளில் டிரெண்ட் மாறியுள்ளது எனவும், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை தொடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக, காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிகள் வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இடையே போட்டி உள்ளது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடியாக போட்டி உள்ளது.

 Suvarna News pre poll survey 2 says BJP may win 110-114 seats, Congress victory only 89-97 places

பாஜகவை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் தொடர்ந்து கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் கர்நாடகாவில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

கருத்து கணிப்புகள்: இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் மாநிலத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிரியங்கா காந்தி தொடர்ந்து பல நாட்களாக கர்நாடகாவிலேயே தங்கி 10க்கும் அதிகமான மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசி வருவதோடு, ஊர்வலத்திலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்போது 2வது கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி கர்நாடகாவில் கடந்த மாதம் இருந்த மக்களின் மனநிலை முற்றிலுமாக மாறியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கருத்து கணிப்பு: அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக சுவர்ணா நியூஸ்- ஜான்கீ பாத் சார்பில் கடந்த மார்ச் மாதம் 15 முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை மாநிலம் முழுவதும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவு கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. இதில் பாஜக 98 முதல் 109 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 89 முதல் 97 தொகுதிகளில் வெற்றி பெறும் ஜேடிஎஸ் கட்சி 25 முதல் 29 தொகுதிகளில் வெல்லலாம் எனவும், மற்றவர்கள் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2வது கருத்து கணிப்பு: இந்நிலையில் தான் தற்போது ஏப்ரல் 15 முதல் மே 1ம் தேதி வரை சுவர்ணா நியூஸ் 2வது கருத்து கணிப்பை நடத்தியது. மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் விரிவான தகவல் வருமாறு :

பாஜக நிலவரம்: இதில் பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜக 110 முதல் 114 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி கட்டாயம் என்ற நிலையில் பாஜக கூடுதலாக ஒரு இடத்தையும் கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிலவரம்: மாறாக இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 86 முதல் 98 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. சுவர்ணா நியூஸ்-ஜான் கீ பாத் முதல் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 89 முதல் 97 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் முதல் மற்றும் 2வது கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் கூட மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு இது ஏமாற்றமாக தான் அமைகிறது.

ஜேடிஎஸ் நிலவரம்: அதோடு தற்போது வெளியான 2வது கருத்து கணிப்பில் ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 26 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கருத்து கணிப்பில் இந்த கட்சி 25 முதல் 29 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்சி பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக சுவர்ணா நியூஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்றவர்கள் எவ்வளவு: மேலும் முந்தைய கருத்து கணிப்பில் ஒரு இடத்தில் மற்றவர் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 5 தொகுதி வரை அதிகரிக்கலாம் என நேற்று வெளியான சுவர்ணா நியூஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+