மூட நம்பிக்கையின் உச்சம்.. வயிற்று வலி சிகிச்சைக்கு போனவருக்கு நடந்த கொடூரம்.. அதிர வைத்த பூசாரி
பெங்களூர்: வயிற்று வலியை குணப்படுத்த கோயிலுக்கு சென்ற இளைஞர் ஒருவரை கோயில் பூசாரி, வயிற்றில் கோடாரியால் வெட்டிய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மூட நம்பிக்கையின் உச்சமாக இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.
வயிற்று வலியை குணப்படுத்த வேண்டி வந்த இளைஞரின் வயிற்றில் பூசாரி கோடரியால் வெட்டிய கொடூரமான மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பூசாரி ஜக்கப்பா: கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டத்தில் மேட குட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காசி லிங்கேஸ்வரா என்ற கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஜக்கப்பா கட்டப்பா என்பவர் பூசாரியாக இருக்கிறார். பாகல்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோயிலாக இது உள்ளது. இந்தக் கோயிலில் ஒரு விசித்திரமான வழிபாடு ஒன்று இருந்து வருகிறது.
அதாவது, பக்தர்கள் தங்கள் உடலில் எங்கேயாவது தீராத வலி இருந்தால், அதை குணப்படுத்த இந்தக் கோயிலுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம். கோயில் பூசாரி ஜக்கப்பாவிடம் தங்களுக்கு உடலில் உள்ள பிரச்சினையை பற்றி சொன்னால், வலி இருக்கும் இடத்தில் கோடாரியால் வெட்டுவாராம்.. அதாவது, வலி இருக்கும் இடத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் பூசாரி வெட்டுவாராம்..
வயிற்று வலிக்காக: வெட்டிய இடத்தில் உடனடியாக மஞ்சள் பொடி போட்டு கட்டி விடுகிறார்கள். பூசாரி வலி இருக்கும் இடத்தில் வெட்டினால் தீராத வலி குணம் அடைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், வயிற்று வலிக்காக கோயிலுக்கு சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றில் கோடாரியால் பூசாரி வெட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவில், இளைஞரின் கை கால்களை சிலர் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அப்போது பூசாரி ஜக்கப்பா ஒரு கோடாரியை எடுத்து இளைஞர் வயிற்றில் 2 முறை வெட்டுகிறார். முதல் வெட்டில், ரத்தம் பீறிட்டு கொட்டுகிறது. அப்போது வலி தாங்க முடியாமல் அந்த இளைஞர் அலறுகிறார். ஆனாலும் அவரது கை கால்களை அருகில் இருப்பவர்கள் கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்கிறார்கள்..
பரவிய வீடியோ: பூசாரி வெட்டிய உடன் வெட்டப்பட்ட இடத்தில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டுகிறார்கள்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் வீடியோவை பார்த்து பலரும் பதைபதைத்து போயுள்ளனர். இது போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கைது செய்து விசாரணை: கோயில் பூசாரி ஜக்காப்பா கட்டாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த கால கட்டத்திலும் இது போன்ற கொடூரமான மூட நம்பிக்கையை பின்பற்றுகிறார்களே என காட்டமாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். மனித சமூகம் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது. நிச்சயமாக ஒரு காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் மனித சமூகம் குடியேறும் என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். இப்படி அறிவியல் துறையிலும் டெக்னாலஜி துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்றும் கூட இத்தகைய மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுவது கொடூரத்தின் உச்சம் என்பது நெட்டிசன்களின் வாதமாக உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications