அரசை எதிர்பார்த்தது போதும்.. 100 கோடிக்கு தடுப்பூசி வாங்க காங்கிரஸ் ரெடி.. டி.கே.சிவகுமார் அறிவிப்பு
பெங்களூர்: மத்திய அரசிடம் போதிய கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மக்களுக்கு செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சி ரூ.100 கோடி செலவில் புது திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி 100 கோடி மதிப்புள்ள கோவிட் -19 தடுப்பூசியை வாங்க கர்நாடக காங்கிரஸ் முன்வந்தது.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக 100 கோடிக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான செயல் திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம், அரசு, மருத்துவமனைகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தடுப்பூசி வாங்க மட்டுமே அனுமதிக்கிறது. எனவே, நேரடி கொள்முதல் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்குமாறு நாங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம், என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
"கொள்முதல் வெளிப்படையான முறையில் செய்யப்படும்," என்றும் டி.கே.சிவகுமார் கூறினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications