சத்தமின்றி பரவும் கொரோனா வைரஸ்.. பெங்களூர்வாசிகளின் நிலை என்ன? ஒரு குட் நியூஸ் இருக்கு!
பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 80 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளாவில் 7 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 7 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதேபோல் மும்பை, ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் பெங்களூருக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. அதன்படி பெங்களூரின் எலஹங்கா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி தொடக்கத்தில் சீனா சென்றார். வுஹன் நகரத்திற்கு வியாபார விஷயமாக சென்று திரும்பி உள்ளார்.
ஜனவரி 19 திரும்பிய அவருக்கு ஜனவரி 21ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் உடனே பெங்களூர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தாக்கவில்லை. ஆனால் மோசமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் இவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவரின் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை. ஆனால் பாதுகாப்பு கருதி இவருக்கு மேலும் சில நாட்கள் சிகிச்சை அளித்து கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பெங்களூரில் யாருக்கும் இதுவரை கொரோனா பரவவில்லை என்று கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications