கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.. எடியூரப்பா கருத்து

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Karnataka CM HD Kumarasamy: போர்வை கூட போர்த்திக்காமல்.. கட்டாந்தரையில் தூங்கும் குமாரசாமி- வீடியோ

    பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எக்காரணம் கொண்டும் மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் வருவதற்கு விட மாட்டோம் என, பாஜ மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களை கைப்பற்றியிருந்த பாஜகவை ஆட்சியமைக்க விடாமல், 35 தொகுதிகளை வென்ற குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

    The re-election of Karnataka is a waste of peoples tax money..Yeddyurappa

    இதனையடுத்து குமாரசாமிக்கு முதல்வர் பதவியையும் விட்டு தந்தது காங்கிரஸ். கடந்த ஓராண்டிற்கும் மேலாக கத்தி மேல் நிற்பது போல முதல்வர் பதவியில் உள்ளார் குமாரசாமி. அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சமாளிக்க முடியால் திணறி வருகிறது கர்நாடக கூட்டணி அரசு.

    இதற்கிடையே ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்தி அதிருப்தி எம்எல்ஏ-க்களை வளைக்க பாஜகவும் கடும் முயற்சி மேற்கொண்டது. தற்போதும் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களுக்கு குமாராசாமி அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.

    இதனிடையே காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சிகளிடையே கடந்த 10 நாட்களாக பூசல் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாட்களுக்கு முன் இது தொடர்பாக பேசிய மஜத தேசியத்தலைவர் தேவகவுடா, விரைவில் கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டுவிட கூடும் என கூறினார்.

    அவரது இந்த கருத்தால் நிச்சயம் கர்நாடகாவில் நடைபெற்று வரும் கூட்டணி அரசு கவிழ்ந்து விடும் என்று எதிர்கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. மாநில அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா, எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் வருவதற்கு விட மாட்டோம்.

    தேவகவுடா வேண்டுமானால் சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் வரட்டும் என விரும்பலாம். ஆனால் தற்போதைய சூழலில் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. தேர்தலை நடத்த பாஜக எக்காரணம் கொண்டும் அவகாசம் அளிக்காது. தற்போது காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியினர் ஆட்சி நடத்தி வருகின்றனர்.

    இவர்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ஆட்சி நடத்தும் வாய்ப்பை எங்களுக்கு வழங்க வேண்டும். ஒருவேளை கூட்டணி ஆட்சி கவிழும் பட்சத்தில் ,105 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உள்ள பாஜக-விற்கு ஆட்சியமைக்க வாய்ப்பளிக்க வேண்டும். அது தான் முறையும் கூட.

    ஒருபக்கம் என்னவென்றால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்துவது தேவையற்றது என காங்கிரஸ் கூறி வருகிறது. மறுபக்கம் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என மஜத கட்சி கூறி வருகிறது.

    இதிலேயே அவர்களது கூட்டணி அரசானது குழப்பத்தில் மூழ்கியுள்ளதை காண முடிகிறது. எனவே மாநிலத்தில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முடிவு பொதுமக்களை தொல்லைப்படுத்துவதாக அமைந்து விடும்.

    ஒன்றரை வருடத்திற்குள் மீண்டும் தேர்தலை நடத்தினால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும். எனவே பாதிப்புகளை தவிர்க்க கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் - மஜத கட்சியினர் பாஜகவிடம் வழங்கிவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+