ஊதியே பெருசாக்குறாங்க! நம்பாதீங்க.. பெங்களூரில் சில இடத்தில் தான் வெள்ளப்பாதிப்பு.. கிளம்பிய வாதம்
பெங்களூர்: ‛‛பெங்களூர் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. சில இடத்தில் தான் வெள்ளப்பாதிப்பு உள்ளது. ஆனால் ஊதியே பெருசாக்குறாங்க. இதை நம்பாதீங்க'' என ட்வீட்டரில் புதிய வாதம் கிளம்பியுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்து வருகிறது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது பெங்களூர் நகரின் சில இடங்களில் மழைநீர் அதிகமாக தேங்கி உள்ளது.

பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை
ஆகஸ்ட் 30ம் தேதி மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மட்டும் 130 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. இதனால் பெங்களூரில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சில இடங்களில் உள்ள குடிசை வீடுகள் முதல் மாடமாளிகைகளை மழைநீர் சூழ்ந்தது.அதாவது பெங்களூர் மாநகராட்சியின் மகாதேவபுரா மண்டலத்தில் தான் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது.

ஐடி நிறுவன பகுதிகள்
பெங்களூர் பெல்லந்தூர், சார்ஜாபுரா, மகாதேவபுரா, சந்தாபுரா, பொம்மனஹள்ளி, இந்திரா நகர், மாரத்தஹள்ளி, வர்த்தூர், ஒயிட்பீல்டு, அவுட்டர் ரிங் ரோடு உள்பட ஐடி நிறுவனங்கள் உள்ள இடங்களில் மழை நீர் புகுந்து கொண்டது. புதிதாக திடீரென உதயமான புற நகர் பகுதிகள்தான் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஊதியே பெருசாக்கிட்டாங்க..
இந்நிலையில் தான் பெங்களூரின் வெள்ள பாதிப்பு என்பது தற்போது சமூக வலைதளங்களில் முக்கிய பேசும் பொருளாக உள்ளது. இதற்கிடையே தான் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்னொரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது பெங்களூர் நகர் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இடங்கள் சில இடங்களில் தான் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால் ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் அவர்கள் சமூக வலைதளங்களில் பெங்களூர் மழை வெள்ளம் குறித்து ஊதிப்பெருச்சாக்கிவிட்டனர். இதனை நம்ப வேண்டாம் என சிலர் கூறி வருகின்றனர்.

எதிர்வாதம்
அந்த வகையில், பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் பெங்களூரில் உள்ள ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், ‛‛இது பெங்களூரு தான். இணையதளம் என்றால் நாம் அனைவரும் வெள்ளத்தில் மிதக்கிறோம் என நினைக்கும் நிலை உள்ளது'' என்றார். பல்லவி என்பவர், ‛‛பெங்களூரின் குறிப்பிட்ட பகுதியில் தான் மழைநீர் சூழ்ந்துள்ளது. முழு நகரத்தையும் அல்ல'' என கூறியுள்ளார்.

பிரீத்தி செனாய்
மேலும் பிரீத்தி செனாய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காரில் செல்லும் வீடியோ ஒ்ன்றை பதிவிட்டுள்ளார். அந்த ரோட்டில் மழை வெள்ளம் எதுவும் இல்லை. இதுகுறித்து பிரீத்தி செனாய், ‛‛ பெங்களூர் இப்போது இப்படித்தான் இருக்கிறது. நான் பார்க்கும் படங்கள் அனைத்தும் வெள்ளம் சார்ந்தவையாக இருந்தது. இதனால் தான் தற்போது ட்வீட் செய்ய விரும்பினேன். பெங்களூரில் ஒரு சில இடங்களில் தான் வெள்ள பாதிப்பு உள்ளது'' என கூறியுள்ளார்.

தொடரும் கருத்து பரிமாற்றம்
மேலும் இன்னும் சிலர், பெங்களூர் ஜெயநகர், மெஜஸ்டிக், ராஜாஜிநகர் உள்பட பல இடங்களில் வெள்ள பாதிப்பு எதுவும் இல்லை. பெங்களூரில் 5 சதவீதம் அதாவது புறநகர் மற்றும் ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அது மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications