கர்நாடக துணை முதல்வராக முஸ்லீம் ஒருவர் இருக்க வேண்டும்.. வக்ஃபு வாரியம் தலைவர் கோரிக்கை
பெங்களூர்: கர்நாடக முதல்வர் யார் என்பது தொடர்பாக பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வராக முஸ்லீம் ஒருவர் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு வக்ஃபு வாரியம் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் தேர்வு தொடர்பாக பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தலைமைக்கு அளித்த்து தீர்மானம் நிறைவேற்றபட்டது. யாரை தேர்ந்தெடுத்தாலும் 3 துணை முதல்வர் பதவிகளை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை லிங்காயத், ஒக்கலிகர், முஸ்லிம், தலித் சமூகங்களை சேர்ந்தவர்கள் ஆதரித்துள்ளனர்.
அதனால் அந்த சமூகங்களில் லிங்காயத், ஒக்கலிகர், முஸ்லிம் ஆகிய சமூகங்களுக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கர்நாட துணை முதல்வராக முஸ்லீம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று வக்ஃபு வாரிய தலைவர் ஷாபி சாடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:-

கர்நாடக துணை முதல்வர் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எங்களுக்கு 30 சீட்கள் கொடுத்தார்கள். எங்களுக்கு 15 கிடைத்தது. முஸ்லீம் வேட்பாளர்கள் 9 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களால் தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு சமூகமாக காங்கிரஸ் கட்சிக்கு நிறைய பங்களிப்பை நாங்கள் செய்துள்ளோம்.
எங்களுக்கு பிரதிபலன் கொடுக்க வேண்டிய நேரம் இது. துணை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதுபோக உள்துறை, வருவாய், கல்வி உள்பட முக்கிய 5 துறைகள் உள்பட 5 அமைச்சர்களும் எங்கள் சமூகத்திற்கு வேண்டும். எங்களுக்கு நன்றி தெரிவிக்க இதை கொடுப்பதற்கான பொறுப்பு காங்கிரஸ் கட்சி உள்ளது.
இந்த கோரிக்கைகள் நிறைவேறுவது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை நாங்க்ள் நடத்தியிருக்கிறோம். வெற்றி பெற்ற 9 முஸ்லீம் வேட்பாளர்கள் யார் அமைச்சர் என்பது பொருத்தமற்றது. இது காங்கிரஸ் கட்சியால் முடிவு செய்யப்படும். முஸ்லீம் வேட்பாளர்கள் பிற தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து இருக்கிறார்கள்.
இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அவர்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். எனவே முஸ்லீம் சமூகத்தில் இருந்து சிறந்த துணை முதல்வர் ஒருவர் இருக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு" என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications