ஸ்தம்பித்த பெங்களூர் ஒசூர் சாலை! வாக்களிக்க தமிழகத்துக்கு திரளும் மக்கள்! பேருந்துக்காக காத்திருப்பு
பெங்களூர்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்களிக்க பெங்களூரிலிருந்து, தமிழகத்திற்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று மதியம் முதல் ஒசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு, வாக்காளர் மனநிலை, உள்ளூர் பிரச்சினைகள் ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றுகின்றன.

வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடைமை ஆற்றுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக திரும்பி வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று பணியை முடித்துவிட்டு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதால் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நெரிசல் நிலவுகிறது.
பெங்களூரில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சிப்பதால், பேருந்து நிலையங்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது.
பலர் இன்னும் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு பெங்களூருவில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ஏராளமான மக்கள் திரண்டுள்ளதால் நேற்று மதியம் முதல் ஒசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications