எடப்பாடி கையில் தமிழகம்.. மக்கள் தீர்ப்பு நாளை வரும்! அடித்துச் சொல்லும் அதிமுக மாஜி ஆர்பி உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி கையில் தமிழகம் என்ற மகத்தான மக்களின் தீர்ப்பு நாளை வரும் எனவும், கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அதிமுக தொண்டர்களை சோர்வடைய, மடைமற்றம் செய்ய எத்தனை ஆயுதங்களை எடுத்தாலும்திமுகவிற்கு பகல் கனவாக தான் போகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர்.பி உதயகுமார் பேசுகையில்," மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் நாளைய தினம் சட்டமன்றத் தேர்தலுக்கான தீர்ப்பு வாசிக்கப்பட உள்ளது.

EPS

54 ஆண்டுகால அதிமுகவை புரட்சித்தலைவர் 17.10.1972 ஆண்டில் இந்த இயக்கத்தை தோற்றுவித்தார், அம்மா இந்த இயக்கத்தை வளர்த்தார். இன்றைக்கு எந்த அரசியல் பின்புலம் இல்லாமல் ஒரு சாமானிய விவசாயாக எடப்பாடியார் அதிமுகவை தேர்தல் களத்தில் வெற்றியை நிலை நாட்ட உள்ளார்.

எடப்பாடி தான் முதலமைச்சர் என தமிழக மக்கள் நாளைய தினம் தீர்ப்பை அளிக்கப் போகிறார்கள். எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொழுது ஒரு நாள் தாங்குவாரா, ஒரு வாரம் தாங்குவாரா, ஒரு வருடம் தாங்குவாரா என்ற கேட்டவர்கள் மத்தியில் புன்னகையை பதிலாக கொடுத்து நான்கரை ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை செய்து மக்கள் இதயங்களில் இடம்பிடித்து உள்ளார். இதை நாங்கள் தேர்தல் களத்தில் மக்கள் முகத்தின் மூலம் பார்த்தோம்.

கொரோனா காலத்தில் கூட அன்றைக்கு 32 வருவாய் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தன் உயிரை பற்றி கவலைப்படாமல் விவசாயிகள், வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தார். அதேபோல ஒவ்வொரு தொகுதிகளும் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு மக்களின் பிரச்சனை ஆராய்ந்து ஸ்டாலின் பொய் முகத்தை தோலியுறுத்தி காட்டினார் இதை மக்கள் வரவேற்றனர்.

தற்போது எடப்பாடியார் தேர்தல் களத்தையும் புரட்டி போட்டு உள்ளார் கோடி கோடியாக வைத்து விளம்பரயுகத்தை நடத்தியவர்கள் மத்தியில் அந்த யுகத்தை மாற்றி உண்மை முகமாக தேர்தல் பிரச்சாரத்தில் எதார்த்தத்தை, சத்தியத்தை, மக்களுக்கு தேவைகளை எடுத்து வைத்தார். இன்றைக்கு 234 தொகுதிகளிலும் எடப்பாடியார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது இதில் எடப்பாடியார் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளார் என்பதை மக்கள் தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.

தற்போது கருத்து கணிப்பில் எடுத்துள்ளார்கள் தமிழகத்தில் ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ளனர் இதில் எத்தனை கோடி வாக்காளர்களை சந்தித்து உள்ளனர்? மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியார் உள்ளார். ஆனால் இன்றைக்கு அதிமுக தொண்டர்களை திசை திருப்பும் வகையில், சோர்வு அடைய செய்யும் வகையில், மடைமாற்றம் செய்யும் வகையில் எத்தனை ஆயுதங்களை திமுக எடுத்தாலும் அது கைகூடாது பகல் கனவாக தான் போகும்.

இன்றைக்கு எடப்பாடியார் தெளிவான அறிக்கையை தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கொடுத்துள்ளார். அதுதான் நம்பிக்கையின் ஆயுதமாக இருக்கும் இன்றைக்கு எதிரிகளை சூரசம்ஹாரம் செய்யும் வேலாயுதமாக எடப்பாடி உள்ளார். எடப்பாடியாரின் அறிக்கை தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் தமிழகத்தை ஆளும் பொறுப்பை எடப்பாடியார் கையில் வழங்க மக்கள் தீர்ப்பு எழுதி விட்டார்கள். அதை நாளைய தினம் வாசிக்க போகிறது" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+