Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. பேச்சினால் வரும் பேராபத்து
Rishabam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் ரிஷபத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுப விரய பிராப்தம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.
அனுகூலம்
நல்ல ஆசான்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நல்ல மருத்துவர்கள், மருத்துவ ஆலோசனைகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். வெளிநாட்டில் தொழிலில் இருந்து வந்த அமைப்புகள், கவலைகள் எல்லாம் நீங்கும். மீண்டும் கடல் கடந்த நல்ல விஷயங்கள் நடக்கும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
பேச்சில் கவனம்
எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். வசந்தங்கள் காணப்படும் காலகட்டமாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சுபகாரியத் தடைகள் நிவர்த்தியாகும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதம், சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடம் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தெளிவாகப் பேசுவது நல்லது.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். வியாபாரம், தொழிலில் நல்ல லாபங்கள் காணப்படும். முதுகுத் தண்டுவடம், கழுத்து, மயக்கம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கோவிந்தாநாமங்களை சொல்வது நன்மையைத் தரும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்!












Click it and Unblock the Notifications