பெங்களூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்.. சென்னை திரும்புகிறார்
பெங்களூர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூர்- ஓசூர் சாலையில் உள்ள நாராயணா இருதாலயா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திற்கு அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

லேசான மயக்கமும் அடைந்தார். இதையடுத்து அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் அமைச்சரை உடனடியாக காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷை சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அங்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலையை பரிசோதித்தனர்.
அதில் அமைச்சருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாலும், வயிற்றுவலியாலும் அவர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தனர். அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அங்கு திரண்டனர். இதனிடையே, சிகிச்சைக்கு பிறகு ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு பெங்களூர் சென்றார். பெங்களூர் - ஓசூர் சாலையில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு, பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை குறித்து பெங்களூர் மருத்துவமனை இன்று காலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல் நிலை சீராக உள்ளது. அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசன வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் கார் மூலமாக சென்னை திரும்புகிறார்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications