Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛கடைக்குட்டி சிங்கம்' பட பாணியில் பத்திரிகை.. மாப்பிள்ளையின் பெயருக்கு பின்னால் பாருங்க.. கர்நாடகா டிரெண்ட்டே இதுதான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛ஏன் மச்சான்.. எல்லோருக்கும் பெயரையும், பட்டத்தையும் சேர்த்து போட்டு இருக்கீங்க.. தாய் மாமன் என் பெயரை மட்டும் மொட்டையாக போட்டு இருக்கீங்க..

டாக்டருக்கு எல்லாம் Drனு போட்டு இருக்கீங்க.. இன்ஜினியரிங் படித்தவங்களுக்கு எல்லாம் Erனு போட்டு இருக்கீங்க.. பிரிண்டிங் பிரஸ் வைச்சி நடத்துற வடிவேலு மச்சானுக்கு கூட பிரஸ்-னு கவுரவமாக போட்டு இருக்கீங்க.. விவசாயம் பண்ணுறவங்களுக்கு..

tumakuru-bridegroom-used-vivasayi-words-behind-his-name-in-his-marriage-invitaion

விவசாயினு போட்டு இருக்கலாம்லா?'' இது கடைக்குட்டி சிங்கம் படத்தில் ‛குணசிங்கம்' கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி பேசும் வசனம்.

விவசாயினு போடுங்க

அதோடு, ‛‛குணசிங்கம் விவசாயினு போடுங்க.. நல்ல கம்பீரமாக இருக்கும்.. நானும் மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். எல்லா தொழிலுக்கும் ரிட்டையர்மென்ட் இருக்கு.. ஆனால் எங்க தொழிலுக்கு மட்டும் தான் ரிட்டையர்மென்ட் கிடையாது'' என்று விவசாயத்தையும், விவசாயிகளையும் பெருமைப்படுத்தி இருப்பார் நடிகர் கார்த்தி.

அதுமட்டுமின்றி நடிகர் கார்த்தி தனது பைக்கில் ‛விவசாயி' என பச்சை நிற போர்டு வைத்திருப்பார். இந்த திரைப்படம் பல விவசாயிகளையும் ஊக்கப்படுத்தியது. இதையடுத்து பலரும் பத்திரிகைகளில் விவசாயி என்றும், தங்களின் பைக், கார்களில் விவசாயி என்றும் எழுத தொடங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தான் கர்நாடகாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா இளைஞர்

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரோ தாலுகா குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேஜஸ் குமார். இவருக்கும் ஹர்ஷிதா என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் நாளை (பிப்ரவரி 4) நடைபெற உள்ளது.

இதில் மணமகன் தேஜஸ்குமார் மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது திருமண பத்திரிகையில் தேஜஸ்குமார் (விவசாயி) ராயல் மெக் என்று அச்சடித்துள்ளார். இந்த பத்திரிகை தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்று வருகிறது.

பெயருக்கு பின்னால் விவசாயி

தற்போது விவசாயம் செய்யும் பலருக்கும் திருமணத்துக்கு பெண் கிடைப்பது இல்லை. ஆனால் தேஜஸ்குமார் தனது பத்திரிகையில் விவசாயி என்று அச்சிட்டுள்ளார்.இதுபற்றி தேஜஸ்குமார் கூறியதாவது:

‛‛நான் விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தன். நாங்கள் இப்போதும் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக எங்களின் குடும்பம் விவசாயம் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு திருமணம் செய்ய பெண் கொடுக்க கூடாது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இந்த எண்ணம் மறைய வேண்டும்.

விவசாயத்துக்கு வந்தது ஏன்?

ஏனென்றால் விவசாயிகளும் இப்போது கைநிறைய சம்பாதிக்கிறார்கள். விவசாயம் செய்து வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் நிம்மதி வேறு எந்த தொழிலும் கிடையாது. மனைவியை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றால் அது விவசாயிகளால் மட்டுமே சாத்தியமாகும்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து நானும் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். ஆனால் அந்த பணியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. இதனால் விவசாயத்துக்கு வந்துவிட்டேன்.நானும் என் நண்பர்களும் விவசாயம் செய்கிறோம்.

விவசாய உபகரணங்களை விற்பனை செய்கிறோம். இப்போது எங்களுக்கு வசதியான வாழ்க்கையும் நிறைய வருமானமும் இருக்கிறது. விவசாயிகள் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை மக்களுக்குக் காட்டுவதே எனது திருமணத்தின் முக்கிய நோக்கம்.

நெட்டிசன்கள் பாராட்டு

நான் திருமணம் செய்துகொள்ளும் ஹர்ஷிதா, பி.காம் படித்துள்ளார். வேறு எந்த பணி செய்தாலும் ஒருநாள் ஓய்வு உண்டு. அதேபோல் பணியில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உண்டும். மேலும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. ஆனால் விவசாயத்தில் அப்படி எதுவும் இல்லை. நிம்மதியான வாழ்க்கை வாழலாம்'' என்று கூறியுள்ளார்.

இவர்களின் இந்த பத்திரிகை தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் புதுமண ஜோடியான தேஜஸ்குமார் - ஹர்ஷிதாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+