ரூ.10 லட்சம் அபராதம்.. 10 ஆண்டுகள் சிறை.. கர்நாடக மதமாற்ற தடை சட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?
பெங்களூரு : உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட மத மாற்ற எதிர்ப்பு சட்டங்களை போலவே கர்நாடகாவில்பாரதிய ஜனதாவின் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசும், நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத மாற்றத்திற்கு எதிரான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது போல பாஜகவின் பசவராஜ் பொம்மை முதல் அமைச்சராக உள்ள கர்நாடக மாநிலத்தில் மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது . இது சட்டத்தின்படி கட்டாய அல்லது சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் இயற்றப்பட உள்ளது.
மாநிலத்தில் மத மாற்றங்களை தடை செய்வதற்கான சட்டத்தை அமுல்படுத்துமாறு பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் இது தொடர்பாக சில மாநிலங்கள் இயற்றிய சட்டங்களை அரசு ஏற்க ஆய்வு செய்து வருவதாகவும் கர்நாடகாவில் விரைவில் அந்த சட்டம் இயற்றப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் செய்தியாளரிடம் கூறியிருந்தார்.
பலவந்தம் மற்றும் தூண்டுதல் மூலமாக மத மாற்றத்துக்கு எதிராக அரசியல் அமைப்பு தெளிவாக உள்ளது என்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் பிஜேபி ஆளும் மாநிலங்களில் சமீபத்திய நடவடிக்கைகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதமாற்ற எதிர்ப்பு சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்..

ஒரு மாதத்திற்கு முன் அறிவிப்பு நோட்டீஸ்
இந்தப் புதிய சட்ட வரைவின்படி மதம் மாற்றம் செய்பவர்கள் அல்லது மதம் மாறுபவர்கள் இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியருக்கு அல்லது கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் பதவிக்கு குறையாத வேற எந்த ஒரு அதிகாரியிடமும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மதமாற்றம் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் இச்சட்டத்தின் கீழ் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

கட்டாய மதமாற்ற திருமணங்கள் செல்லாது
கட்டாய மத மாற்ற எதிர்ப்பு சட்ட மசோதா 2021 வரைவு நகலின் படி சட்ட விரோதமாக மதமாற்றம் அல்லது ஒருவரை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செய்யப்படும் திருமணங்கள் செல்லாது என அறிவிக்கப்படும்

தாய்மதம் திரும்புபவர்களுக்கு பொருந்தாது
கட்டாய மதமாற்ற தடை சட்டம் வற்புறுத்தல், தேவையற்ற செல்வாக்கு அல்லது ஏதேனும் மோசடியான வழிமுறைகளால் அல்லது திருமணத்திற்காக மதம் மாற்றம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் எந்த ஒரு நபரும் தனது முந்தைய மதத்திற்கு மீண்டும் மாறினால் இந்த சட்டத்தின் 3வது பிரிவின் படி அது மதமாற்றமாக கருதப்படாது.

யார் யார் புகார் செய்யலாம்
இந்த மதமாற்ற சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட நபர் அவரது பெற்றோர், சகோதரர், சகோதரி அல்லது வேறு யாரேனும் அவருடன் ரத்த உறவு, திருமணம் அல்லது தத்தெடுப்பு மூலம் புதிதாக உறவுமுறை ஏற்படுத்திக் கொண்டவர்கள் மதமாற்றம் பற்றிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டி புகார் அளிக்கலாம். இந்த புகார் குறித்து காவல்துறையினர் உடனடியாக ஃஎப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், மைனர்களை மதமாற்றினால் கடும் நடவடிக்கை
மதமாற்ற சட்ட வரைவு ஒழுங்கு முறையின் படி பிரிவு 3-ன் கீழ் , தாழ்த்தப்பட்ட மற்றும் 18 வயதுக்கு குறைந்த சிறார்களை கட்டாய மதம் மாற்றினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் இந்த சட்டத்தின்படி பாரபட்சமின்றி 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நீட்டிக்கப்படலாம் என்றும் 25 ஆயிரத்திற்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படும்
18 வயதுக்கு குறைவானவர்கள், பெண்கள், பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நீட்டிக்கப்படலாம் மற்றும் 50 ஆயிரத்திற்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும்.
ஒரே நேரத்தில் அதிகமானோரை கட்டாய மதமாற்றம் செய்பவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு
கட்டாயம் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வசூலிக்கப்படும் அபராத தொகையுடன் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது. சட்டத்திற்கு புறம்பாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணம் நடந்தால் அந்த திருமணம் குடும்ப நீதி மன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்படும் குடும்ப நீதிமன்றங்கள் இல்லாத பட்சத்தில் அத்தகைய வழக்குகளை விசாரிக்க அதிகாரமுள்ள நீதிமன்றம் அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கலாம்.

ஜாமினில் வெளிவர முடியாத குற்றம்
இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் விதிகளை பார்க்கும்பொழுது மதம் மாறுபவர்கள் மற்றும் மாற்றுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு பதிவு செய்யப்படும்.

அமைப்புகளும் விசாரணையின் கீழ் கொண்டு வரப்படும்
உத்தேச மத மாற்றத்திற்கான உண்மையான நோக்கம் மற்றும் காரணம் குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் காவல்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிடுவார் . இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகள் மீறப்பட்டு இருந்தால் மதமாற்றம் மற்றும் அவற்றின் பதிவுகள் ரத்து செய்யப்படும். மேலும் மதமாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகளும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

பிற மாநிலங்களில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள்
கடந்த ஆண்டு நவம்பரில் உத்திரப்பிரதேச அமைச்சரவை சட்டவிரோத மதமாற்ற தடை உத்தரவு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது . அதன்பிறகு மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
இந்தச் சட்டத்தின்படி தவறான தகவல், சட்டவிரோதம், வலுக்கட்டாயம், போலியான அல்லது மோசடியான வழிகளில் மத மாற்றம் செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ஜாமீனில் வர முடியாது என இந்தச் சட்டம் தெரிவிக்கிறது. மேலும் உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்வதற்கான மத மாற்றங்களை மாவட்ட மாஜிஸ்திரேட் அங்கீகரிக்க வேண்டும் என்றும் வெகுஜன மதமாற்றத்தில் ஈடுபடும் சமூக அமைப்பின் பதிவை ரத்து செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகளையும் இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது.
இதேபோல மத்திய பிரதேசத்திலும் மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது அதன் கீழ் மதமாற்றம் செல்லுபடியாகும் வகையில் மாவட்ட மாஜிஸ்திரேட் இடம் 60 நாட்களுக்கு முன் மதமாற்றம் செய்வதற்கான விருப்பத்தை அறிவிக்க வேண்டும் அதன்பிறகு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளலாம். இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மதமாற்ற சுதந்திர சட்டத்தின் படி மதம் மாற விரும்புவோர் 30 நாட்களுக்கு முன்பாக தங்கள் மதம் மாறும் எண்ணத்தை அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications