‛‛காந்தாரா’’ படத்தை புகழ்ந்து தள்ளிய அமித்ஷா.. விண்ணை முட்டிய கைத்தட்டு.. என்ன சொன்னார் தெரியுமா?
கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி பெரும் பாராட்டை குவித்த ‛காந்தாரா’ திரைப்படத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்து பேசி பாராட்டியுள்ளார்.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகாவுக்கு அடிக்கடி சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் தட்சின கன்னடா மாவட்டத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா, ‛காந்தாரா' திரைப்படத்தை புகழ்ந்து பேசினார். இதை கேட்ட மக்கள் உற்சாக மிகுதியில் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதில் அமித்ஷா என்ன பேசினார்? என்ற தகவல் வருமாறு:
சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ‛காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் இந்தியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
காஷ்மீர் பண்டித் காஷ்மீரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதன் அடிப்படையில் கதைக்களம் அமைந்த நிலையில் இந்த படக்குழுவை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். பாஜக ஆளும் பல மாநிலங்களில் அந்த படத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது.

‛காந்தாரா’ திரைப்படம்
அதேபோல் சமீபத்தில் பாஜகவினரால் அதிகமாக பாராட்டப்பட்ட திரைப்படம் என்றால் அது ‛காந்தாரா'. கன்னட மொழியில் வெளியான இந்த படத்தை ரிஷப் செட்டி இயக்கி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சப்தமிக் கவுடா நடித்துள்ளார். நிம்மதியிழந்த அரசர் நிம்மதி தேடி மலைக்கிராமம் செல்கிறார். அங்கு எளிமையான வாழ்க்கை வாழும மக்கள் கிராம தெய்வமாக கற்சிலையை வழிப்பட்டு சந்தோசமாக இருக்கிறார். தனது மகிழ்ச்சிக்காக கற்சிலையை அரசர் கேட்கும் நிலையில் பெரும்பங்கு நிலத்தை வழங்கி அதனை பெற்று கொள்கிறார். அதன்பிறகு அரசரின் வாரிசு அந்த நிலத்தை கிராம மக்களிடம் இருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். இது நடந்ததா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

‛தெய்வகேலா’ சாமியாட்டம்
இந்த படம் முழுமையாக கர்நாடகாவின் கடலோர கர்நாடகா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ‛துளு நாடு' என அழைக்கப்படும் தட்சின கன்னடா மாவட்டம் மங்களூர், உடுப்பி கடலோர மாவட்டத்தில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கிராம தெய்வ வழிபாட்டை அடிப்படையாக கொண்டதோடு மட்டுமின்றி தெய்வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற கம்பளா, கோலா எனும் சாமியாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சிலிர்க்க வைத்த கிளைமேக்ஸ்
மேலும் தெய்வத்தின் மீது நாட்டம் காட்டாத கதாநாயகன் குலதெய்வத்துடன் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறார் என்பது கிளைமாக்ஸில் அவரது ஓங்கார சத்ததுடன் உடலை சிலிர்க்க வைக்கும் இசையுடன் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை பார்த்த பலரும் தங்களின் கிராம தெய்வங்கள், குலதெய்வங்களை வழிபட கூட்டம் கூட்டமாக சென்றனர். மேலும் பாஜக கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் ‛காந்தாரா' படத்தை பாராட்டினர். அதேவேளையில் மற்றொரு தரப்பு இந்த படத்தை விமர்சனம் செய்தது. இந்த பாராட்டு, விமர்சனத்துக்கு நடுவே காந்தாரா கர்நாடகாவில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் பல மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட்டது.

அமித்ஷா பாராட்டு
இந்நிலையில் தான் காந்தாரா திரைப்படத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். கர்நாடகா மாநிலத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் அடிக்கடி கர்நாடகா சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அமித்ஷா கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா சென்றார். அப்போது அவர் காந்தாரா படம் பற்றி புகழ்ந்து பேசி பாராட்டினார்.

அமித்ஷா கூறியது என்ன?
இதுபற்றி அமித்ஷா பேசுகையில், ‛‛ கர்நாடகாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை காந்தாரா படம் எடுத்து காட்டியிருந்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் கலாசாரத்தை காந்தாரா படம் பார்த்து நான் அறிந்து கொண்டேன். காந்தாரா படம் பார்த்த பின் இதுபோன்ற வளமிக்க பாரம்பரியங்களை மாநிலம் கொண்டிருக்கிறது என அறிந்து கொண்டேன். நாட்டில் சில பகுதிகளே, நாட்டை வளப்படுத்தும் வகையில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களை கொண்டிருக்கிறது. கடினம் வாய்ந்த சூழலிலும் கூட விவசாய பணியில் ஈடுபட்டு நாட்டை வளமடைய செய்கின்றனர்'' என்றார். அமித்ஷாவின் இந்த பேச்சை கேட்ட பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications