சென்னபட்டணா சிக்கல்.. கூட்டணியிலுள்ள குமாரசாமிக்கும், பாஜகவுக்கும் பத்திகிச்சே!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமியும் பாஜக தலைவர்களும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னபட்டணா தொகுதியில் பாஜகவின் யோகேஷ்வர், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மத்திய அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தி வருவதற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 தொகுதிகளில் சிக்காவி, சண்டூரில் பாஜக போட்டியிடுகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளில் தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

சென்னபட்டணா தொகுதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுதியில் பாஜகவின் யோகேஷ்வர் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், லோக்சபா தேர்தலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத், பாஜக சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது சென்னபட்டணா தொகுதியில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. பாஜகவின் யோகேஷ்வர் போட்டியிட விரும்பினால் எங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாம். ஆனால் யோகேஷ்வரை காங்கிரஸ் வளைத்துப் போட்டு களமிறக்கவும் முயற்சிக்கிறது. இதனால் பாஜக மேலிடம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என காத்திருக்கிறோம் என்றார்.
ஆனால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, சென்னபட்டணா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அந்த தொகுதியின் வேட்பாளரை அந்த கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக பாஜகவின் யோகேஷ்வரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மத்திய அமைச்சர் குமாரசாமி நிபந்தனை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை என்றார். இதனால் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மோதல் வலுத்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications