பிரஜ்வல் ரேவண்ணா 3000 ஆபாச வீடியோ..ஒரு வருஷமா வேடிக்கை பார்த்த கர்நாடகா அரசு-நிர்மலா சீதாராமன் பகீர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ்வை வைத்துக் கொண்டு 'ஓட்டு' அரசியலுக்காக ஓராண்டு காத்திருந்தது கர்நாடக காங்கிரஸ் அரசு என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா (ஹாசன், கர்நாடகா) 300 பெண்களை நாசமாக்கி 3,000-க்கும் அதிகமான வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தது பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணிக்கு பிரஜ்வல் ரேவண்ணாவின் இந்த 3,000 வீடியோக்கள் கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

Union Minister Nirmala Sitharaman slams Karnataka Congress Govt on Prajwal Revanna Case


தற்போது பிரஜ்வல் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவின் தந்தைதான் முன்னாள் பிரதமர் தேவகவுடா. பிரஜ்வல் விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பென் டிரைவ்வில் என்ன இருந்தது என்பது கர்நாடகா மாநில அமைச்சர்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்களின் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. கர்நாடகா காங்கிரஸ் அரசாங்கத்தைப் பொறுத்தவரை 'ஒக்கலிகா' ஜாதி ஓட்டுகள்தான் முக்கியம். ஒக்கலிகா ஜாதி ஓட்டுகள் தங்களது கையை விட்டுப் போய்விடும் என்பதற்காகவே அஞ்சியது கர்நாடகா காங்கிரஸ் அரசு. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை முன்வைத்து பாஜகவை விமர்சிக்கிறது காங்கிரஸ். இப்போது பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பி உள்ளார். கர்நாடகா அரசு என்ன மாதிரியான நடவடிக்கை நினைக்கிறதோ அதை செய்யலாம் என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூறி இருக்கிறது.

பிரிஜ் பூஷன் மீதான புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதனால் அவரது மகனுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்புக் கொடுத்திருக்கிறது. குற்றவாளிகளின் மகன்கள் எத்தனையோ கட்சிகளில் இருக்கின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+