லோக்சபா தேர்தலில் நிர்மலா சீதாராமன் - ஜெய்சங்கர் போட்டி? ஸ்கெட்ச் கர்நாடகாவில்!
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்யசபா எம்பிக்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும் உள்ள நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை பாஜக களமிறக்க திட்டமிட்டுள்ளது. இருவரும் கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவலை பாஜக மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கி உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய நிதி அமைச்சராக உள்ளார். அதேபோல் ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் இருவரையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வைக்க அந்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இவர்கள் 2 பேரும் தற்போது வரை தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவில்லை. நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா எம்பியாகவே அரசியலில் பயணிக்கிறார். ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் தூதர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து ஓய்வுக்கு பிறகு பாஜகவில் இணைந்து ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இத்தகைய சூழலில் தான் இருவரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதுதவிர கர்நாடகாவில் உடுப்பி - சிக்கமகளூர், உத்தர கன்னடா, ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றிலும் இவர்கள் களமிறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் பாஜக தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் தான் முதல் முறையாக பாஜக மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி (கர்நாடகாவில் தார்வார் எம்பி) அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛அவர்கள் (மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பெயரை குறிப்பிடாமல்) வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதற்கான வாய்ப்பு என்பது அதிகமானதாக அல்லது குறைவானதாக இருக்கலாம். இவர்கள் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்பது தெரியவில்லை.
இருவரும் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவார்களா? அல்லது வேறு ஏதேனும் மாநிலங்களில் இருந்து போட்டியிடுவார்களா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதுபற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்'' என்றார். இதையடுத்து அவர்கள் பெங்களூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரகலாத் ஜோஷி, ‛‛எதுவும் இறுதியாகாத பட்சத்தில் இந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும். நான் கூறியது என்னவென்றால் நாடாளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பாஜக என்பது தேசிய கட்சி. இந்த விஷயத்தில் கட்சி மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள்'' என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications