மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பெங்களூர்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ளவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா. அவர் நேற்று சித்ரதுர்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நேற்று மதியம் 2 மணி அளவில் உணவுக்குச் செல்லும் முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், உடனே அவரை சித்ரதுர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருப்பதாக தெரிவித்தனர். இதற்கான சிகிச்சையை தொடங்கினர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு மயக்கம் தெளிந்து சுயநினைவு வந்தது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார். அவர் அழைத்து வரப்பட்ட ஆம்புலன்ஸுக்கு பூஜ்ஜிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட அக்கட்சி தலைவர்கள் செல்போன் மூலம் சதானந்த கவுடாவின் உடல்நிலையை கேட்டறிந்தனர்.
சதானந்தா கவுடாவின் நிலை மோசமாக இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் தெரிவித்தனர். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். அவரது இதய செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேல் சிகிச்சைக்காக சதானந்த கவுடா பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே இருந்த ஆதங்கம் நீங்கியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications