நெஞ்சே பதறுதே! பட்டப்பகலில் தனியாக சென்ற பெண்ணை தரதரவென இழுத்து! கொடூரம்.. ஷாக் சிசிடிவி வீடியோ
பெங்களூர்: ஸ்கூட்டியில் தனியாக செல்லும் பெண்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பரபரப்பான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த நபர்கள், விடாமல் துரத்தி சென்று ஓட ஓட விரட்டி தர தரவென இழுத்து நகையைப் பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு பறித்து சென்ற நகை கவரிங் என்பதும் தெரியவந்துள்ளது.
நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூகத்தில் கவலை அளிப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். பட்டப்பகலில் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து ஒரு கும்பல் இத்தகைய கொடூர செயலில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கர்நாடகாவில் பெண்கள் தனியாக செல்லவே அச்சப்பட வைக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஸ்கூட்டியில் சென்ற பெண்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சஞ்சப்பா நகரில் சாலையில் ஸ்கூட்டில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த பெண் தனியாக செல்வதை நோட்டமிட்ட அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தபடி சென்ற இருவர் பின் தொடர்ந்து வந்தனர். முதலில் அந்த பெண்ணிடம் உதவி கேட்பது போல் பாவனை செய்து நகையை அபேஸ் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பெண் சுதாரித்துக்கொண்டு அங்கு நிற்காமல் வேகமாக ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றார். எனினும் அந்த ஹெல்மெட் அணிந்த படி வந்த நபர்கள் விடாமல் அந்த பெண்ணை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த பெண் எங்கு செல்வது என்று தெரியாமல் உதவி கேட்டு வீடுகள் நிறைந்த பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அடுத்து பாதை இல்லை என்பதால் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அந்த பெண் உதவி கேட்டு சத்தமிட்டு இருக்கிறார்.
விடாமல் தர தரவென இழுத்து
அப்போது அவர்களில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி, பெண்ணை நெருங்கினார். இதனால் அந்த பெண் பைக்கை போட்டுவிட்டு தப்ப முயன்றார். எனினும் அந்த நபர் ஓட ஓட விரட்டி சென்று பெண்ணின் நகையை பிடித்து இழுத்துள்ளார். இதில் அந்த பெண் கீழே விழுந்த நிலையில் அப்படியும் விடாமல் தர தரவென இழுத்து நகைகளை பறித்தார். அந்த பெண்ணும் கத்தி கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பட்டப் பகலில் பெண் ஒருவரை விரட்டி விரட்டி நகைப் பறித்த கொடூர சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது தனியாக செல்லும் பெண்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.
அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
Kolar, Karnataka...
— Akshay Akki ಅಕ್ಷಯ್🇮🇳 (@FollowAkshay1) June 26, 2025
Two chain snatchers on a scooter followed a woman, pushed her to the ground near her vehicle and fled with her necklace. pic.twitter.com/xl2baUzhfx
சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த வீட்டில் தான் இந்த காட்சி பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில், திடீரென பெரும் பதற்றத்துடன் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் வந்து நிற்கிறார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த படி இரண்டு நபர்கள் வருகிறார்கள். திடீரென ஒரு நபர் வேகமாக ஓடி வந்து அந்த பெண்ணிடம் நகைப் பறிக்க முயற்சி செய்கிறார். இதை அறிந்த அந்த பெண் ஸ்கூட்டியை அவர் மீது தள்ளிவிட்டு தப்பி செல்ல முயற்சிக்கிறார்.
கவரிங் நகைக்காக
ஆனால் அப்போதும் விடாத அந்த நபர் பெண்ணின் தலைமுடி, நகையை பிடித்து இழுக்கிறார். இதில் அந்த பெண் கீழே விழுந்தும் விடாமல் தர தரவென செயினை பிடித்து இழுத்து அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்லும் பரபரப்பான வீடியோ பதிவாகியிருந்தது. ஒரு பெண் தனியாக நடந்து செல்லவே இவ்வளவு கடினமாக இருக்கிறேதே என்றும், இந்த வீடியோவை பார்க்கும் போதும் ரொம்ப பதற்றமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அந்த பெண் அணிந்திருந்தது கவரிங் நகை என்றும், அதைத்தான் அந்த நபர்கள் திருடிச்சென்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications