பிரதமர் மோடியின் எஸ்கார்டு ஹெலிகாப்டர் புதை மண்ணில் சிக்கியது.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூரு:கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டருடன் பாதுகாப்புக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் புதை மணலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்,

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் சிந்தனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இன்று ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்படருடன் பாதுகாப்புக்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தன. தரையிரங்கும் போது தரை கடினமாக இல்லாதால் ஒரு ஹெலிகாப்படர் புதை மணலில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் எஸ்கார்ட் ஹெலிகாப்டர் சேறு நிறைந்த வயலில் சிக்கியது பாதுகாப்புப் பணியாளர்கள் செய்த சிறிய தவறுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

சிந்தனூர் ஹோசல்லி முகாம் ஹெலிபேடில் சிக்கிய ஹெலிகாப்டரை மீட்கும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் ஜேசிபி மூலம் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக அந்த பகுதியினர் கூறுகையல், எஸ்கார்ட் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக நெல் வயலில் ஹெலிபேட் கட்டப்பட்டது. இருப்பினும், அந்த பகுதி இன்னும் ஈரமாக இருந்ததால், விமானத்தின் எடையை தாங்க முடியாமல் ஹெலிகாப்டர் புதை மணலில் சிக்கிவிட்டது என்று கூறுகிறார்கள்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications