பெங்களூரில் நீதிபதி என்று கூறியவரின் செல்போனில் எல்லாமே அந்த வீடியோக்கள்... சிக்க வைத்த பெண்
பெங்களூர்: திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்கள், கணவனை விவாகரத்து செய்து தனியாக வாழும் பெண்களிடம் சில ஆண்கள், கோடிகளில் சொத்து உள்ளது, பெரிய பதவியில் உள்ளேன்.. எனக்கு வாழ்க்கை துணைதேவை என்று ஆறுதலாக பேசுவார்கள். அப்படி பேசும் நபர்கள், பெண்களை நம்ப வைக்க ஆரம்பத்தில் செலவு செய்வார்கள்.. எல்லாம் செய்வார்கள்.. இறுதியாக காரியம் முடிந்ததும் கழட்டி விடுவார்கள் அல்லது பணம் பறிப்பார்கள்.. அப்படித்தான் பெங்களூரில் பெண் ஒப்பனைக் கலைஞரை போலி நீதிபதி ஏமாற்றி உள்ளார். அவர் செல்போனில் ஏராளமான வீடியோக்கள் இருந்துள்ளது.
பெண்களை ஏமாற்றி பணம் பறிக்க திருமணத்தை சிலர் கருவியாக பயன்படுத்துகிறார்கள். அதுவும் வசதியான குடும்பம், வசதியான வாழ்க்கை முறைக்கு ஆசைப்படும் பெண்களே குறிவைத்து ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால், திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்கள், கணவனை விவாகரத்து செய்து தனியாக வாழும் பெண்களிடம் ஆறுதலாக பேசும் சில ஆண்கள், சமார்த்தியமாக காரியம் சாதிக்கிறார்கள். அப்படி ஏமாற்றம் அடைந்த பெண்ணை மேலும் ஏமாற்றி பணமும் பறிக்கிறார்கள். அதுதான் பெங்களூரில் நடந்துள்ளது.

பெண் ஒப்பனை கலைஞர் புகார்
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒருவர் தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். குடும்ப பிரச்சினையால் கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறேன். எனக்கு தொழில் என்பது மேக்கப் போடுவது தான். சினிமாவில் மேக்கப் (ஒப்பனை) கலைஞராக இருந்து வருகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு சந்திரேகவுடா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அடிக்கடி உல்லாசம்
அதன்பிறகு, எனது வீட்டுக்கு அடிக்கடி அவர் வந்து சென்று வந்தார். என்னுடன் உல்லாசமும் அனுபவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தெரியாமல் சந்திரேகவுடா வீடியோ எடுத்து வைத்து கொண்டார். அதன்பிறகு, என்னை திருமணம் செய்வதாகவும் கூறினார். ஆனால் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக கூறி, என்னை மிரட்டி ரூ. 5 லட்சம் பறித்தார்.
செல்போனில் வீடியோக்கள்
அந்த வீடியோவை வெளியிடுவதாக தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார். அவரது செல்போனில் பல பெண்களுடன் ஆபாசமாக வீடியோ அழைப்பில் பேசும் வீடியோக்கள் இருந்தது. இதனால் சுதாரித்து கொண்டு புகார் அளித்துள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிந்து சந்திரேகவுடாவை கைது செய்தனர்.
நீதிபதி என பொய் கூறினார்
விசாரணையில் அவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருந்தது தெரிந்தது. சிலரிடம் தன்னை நீதிபதி எனவும் சந்திரேகவுடா கூறியிருக்கிறார். மேலும் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததுடன், அவர்களிடமும் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி சந்திரேகவுடா பணம் பறித்ததாக புகார்கள் எழுந்துள்ளது. அதுபற்றியும் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளார்களாம்.. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications