வைரல் வீடியோ!பெங்களூரு ஏர்போட்டில் விஜய் சேதுபதி மீது தாக்குதல்.. பின்னால் இருந்து ஓடி வந்து ஒரே உதை
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் படுபிஸியாக நடித்து வரும நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், துணை கேரக்டர் என அனைத்திலும் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி
தற்போது அவர் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள அவர் பெங்களூருவில் சென்றுள்ளார்.

தாக்குதல்
இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சென்று கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை பின்னால் இருந்து ஒடி வந்து ஒருவர் உதைக்கிறார்.

வைரல் வீடியோ
உடனடியாக விஜய் சேதுபதியுடன் வந்த சிலரும் பாதுகாப்புப் படை வீரர்களும் அந்த நபரைப் பிடிக்க முயல்கின்றனர். இந்த திடீர் தாக்குதலால் சற்று நிலைதடுமாறிய விஜய் சேதுபதியும் தன்னை தாக்கிய நபரை நோக்கி செல்கிறார். இதனால் அந்த இடத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது. சுமார் 10 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்
இந்நிலையில் இது குறித்து தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. மாறாக விஜய் சேதுபதி உடன் சென்ற நண்பர் மீதே தாக்குதல் நடந்துள்ளது. விஜய் சேதுபதியின் நண்பர் மகா காந்தி என்பவருக்கும் ஜான்சன் என்ற சக பயணிக்கும் விமானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே விமான நிலையத்திற்கு வெளியே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகிவிட்டதால் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனப் பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications