காரில் 44 நிமிடம்.. நடந்து போனா 42 நிமிடம்.. பெங்களூரில் இதை பாருங்க.. ஆனா மெட்ரோ செம டிவிஸ்ட்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், அங்குப் பல இடங்களில் காரில் செல்வதை விட நடந்து சென்றாலே விரைவாகச் செல்ல முடியும் என்றே சூழலே இருக்கிறது. இதற்கிடையே பெங்களூர் டிராபிக் தொடர்பான போஸ்ட் ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
பெங்களூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் டிராபிக் தான். பெங்களூர் டிராபிக் குறித்த மீம்கள் இணையத்தில் சுற்றுவதை நீங்களும் பார்த்து இருக்கலாம்.

2023ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான டிராபிக்கை கொண்ட 10 நகரங்களில் உள்ள இரு நகரங்களில் பெங்களூரும் ஒன்று.. இது உலகின் இரண்டாவது மிகவும் நெரிசலான நகரமாகவும் இருக்கிறது.
என்ன காரணம்: மிக விரைவான நகரமயமாக்கல், மோசமான திட்டமிடல் மற்றும் பொதுப் போக்குவரத்து பெரியளவில் இல்லாதது ஆகியவே தான் பெங்களூர் டிராபிக்கிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பீக் ஹவர்ஸில் பொதுமக்களுக்குச் சாலைகளிலேயே மூச்சுத் திணறுவதும் அளவுக்கு டிராபிக் பாதிப்பு மோசமாகவே இருக்கிறது. இதற்கிடையே இப்போது பெங்களூர் டிராபிக்கை விளக்கம் போஸ்ட் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதாவது பெங்களூரில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பல நேரங்களில் கார், பைக்கை விட நடந்து செல்வதே வேகமானதாக இருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையிலேயே இப்போது ஒரு போஸ்ட் இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக ஆயுஷ் சிங் என்பவர் தனது ட்விட்டரில் கூகுள் மேப்ஸ் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.
ரொம்ப லேட்: அதில் பிரிகேட் மெட்ரோபோலிஸிலிருந்து கேஆர் புரம் ரயில் நிலையத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பது விளக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 5 கிமீ தொலைவில் இருக்கும் கேஆர் புரத்திற்கு காரில் செல்ல 44 நிமிடங்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் நடந்து சென்றால் 42 நிமிடங்களில் செல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்த அவர் பெங்களூரில் மட்டுமே இதுபோல எல்லாம் இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது போஸ்ட் ட்விட்டரில் இப்போது டிரெண்டாகி வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ள நிலையில், சுமார் 886 ரிட்வீட் செய்துள்ளனர். இதில் கமெண்ட் செய்யும் பலரும் அவர் சொல்வது சரி என்றே பதிவிட்டு வருகின்றனர். பெங்களூரை இந்தியாவின் டிராபிக் தலைநகர் என்றே கூறிவிடலாம் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கருத்து: இன்னும் சிலர் பெங்களூர் மட்டுமின்றி உலகின் அனைத்து மெட்ரோக்களிலும் இதே நிலை தான் எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் மும்பை மற்றும் டெல்லியிலும் இதே நிலை தான் என கூறியிருக்கிறார்.
மெட்ரோ செம ட்விஸ்ட்: இன்னும் சிலர் கருடாசர்பல்யாவிலிருந்து கே.ஆர். புரத்திற்கு மெட்ரோவில் சென்றால் 15 நிமிடங்களில் செல்ல முடியும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு நபர், "காரில் செல்ல 40 நிமிடங்கள் என்றாலும் அதிலேயே பொது போக்குவரத்தில் 13 நிமிடங்களில் செல்ல முடியும் எனக் கூகுள் கூறுகிறது. பல நேரங்களில் நாம் பொது போக்குவரத்து என ஒன்று இருப்பதையே மறந்துவிடுகிறோம். அதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணம் எனப் பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications