கர்நாடகாவில் யாருடன் கூட்டணி.. டுவிஸ்ட் கொடுத்த ஜேடிஎஸ்.. இப்போதே கிளம்பிய பரபரப்பு.. என்னாச்சு
பெங்களூர்: கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கே வாய்ப்புகள் அதிகம் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியிருக்கும் நிலையில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கிங் மேக்கராக வலம் வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனால், அந்த கட்சி எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. முடிவுகள் நாளைய தினமே அறிவிக்கப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.

பாஜக ஆளும் ஒரே தென் மாநிலம் கர்நாடகாதான் என்பதால் இந்த தேர்தலில் வென்று பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இது அப்படியே நடக்கும் பட்சத்தில் குமாரசாமி கிங் மேக்கராக வலம் வரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதனால் தற்போதே ரிசார்ட் அரசியல் குறித்த பேச்சும், குமாரசாமி யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற பேச்ச்சுகளும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் வலம் வர தொடங்கிவிட்டன. இந்த நிலையில், குமாரசாமி சிங்கப்பூர் சென்று விட்ட நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தன்வீர் அகமது, கர்நாடகாவில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக முடிவை ஜேடிஎஸ் எடுத்து விட்டதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் எங்களை தொடர்புகொண்டு வருகின்றன. யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது. உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்துவோம். கர்நாடகம் மற்றும் கன்னடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட போகிற கட்சிகளுடன் நாங்கள் இணைவோம். எங்கள் ஆதரவு இன்றியாராலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று கூறியிருந்தார்.
ஆனால், தன்வீர் அகமது கூறியது போல முடிவு எதையும் எடுக்கவில்லை என்று ஜேடிஎஸ் கட்சி இன்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஜேடிஎஸ் கட்சியின் மூத்த தலைவர் இப்ராகிம், "அவர் (தன்வீர் அகமது) எங்கள் கட்சியின் செய்தி தொடபாளர் கிடையாது. எங்கள் கட்சியின் உறுப்பினரும் இல்லை. நீண்ட காலத்திற்கு முன்பே எங்கள் கட்சியை விட்டு சென்று விட்டார். நாங்கள் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது போல தொங்கு சட்ட சபை அமையாது என்றும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க பாஜக ஆபரேஷன் தாமரையை செயல்படுத்தி விடும் என அச்சப்பட்டு காங்கிரஸ் கட்சி தற்போதே ஆலோசனையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications